காதலில் விழுந்தாரா பூஜா ஹெக்டே...விரைவில் டும் டும் டும்..மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

Beast heroine pooja hegde going to marry cricket player

வாய்ப்பு இல்லை: விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

ராசி இல்லாத நடிகை: தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

Beast heroine pooja hegde going to marry cricket player

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

காதலில் விழுந்த பூஜா: இந்நிலையில், பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிந்ததை அடுத்து, இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X