ரிலீசுக்கு தயாராகும் பீஸ்ட்...வெளியான அசத்தல் அப்டேட்

சென்னை : மற்ற நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விஜய்யின் பீஸ்ட் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறதாம். இது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஜனவரியில் ரிலீஸ் செய்ய முடியாமல் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரிலீசை அறிவித்து வருகின்றன. இதனால் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள், அது பற்றி எந்த அப்டேட்டும் இல்லையே என கவலையில் உள்ளனர்.

நாள் முழுவதும் டிரெண்டிங்

நாள் முழுவதும் டிரெண்டிங்

பொறுமை இழந்த விஜய் ரசிகர்கள் #BeastUpdate என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நாள் முழுவதும் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு தகவலாக ஏப்ரல் 28 ல் தான் பீஸ்ட் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். பீஸ்ட் அப்டேட் வெளியிடும் படி சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் திலீப்குமாரிடம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

செம அப்டேட்டா இருக்கே

செம அப்டேட்டா இருக்கே

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, விஜய்யின் பீஸ்ட் படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதுமாக முடிந்து விட்டதாம். மிக விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் துவங்கப்பட உள்ளதாம். ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

 கன்ஃபார்ம் செய்த விக்கிபீடியா

கன்ஃபார்ம் செய்த விக்கிபீடியா

ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே விக்கிபீடியாவிலும் பதிவிட்டு விட்டார்கள். அதில் அனிருத், பீஸ்ட் பாடல்களுக்கு இசையமைக்கும் வேலையை நவம்பர் மாதத்திற்கு முன்பே முடித்து விட்டதாகவும், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி போன்ற விஷயங்களால் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போ

பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போ

பீஸ்ட் டப்பிங் முடிந்து விட்டதால் விரைவில் ஃபஸ்ட் சிங்கிள், டீசர் போன்றவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளில் விஜய் பாடிய பாடல் தான் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்படுவதால், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 13 ம் தேதி பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X