சும்மா இந்தியில டிரான்ஸ்லேட் பண்ண முடியாது.. தமிழ் கத்துக்கிட்டு வா.. பீஸ்ட் மாஸ் வசனம் !
சென்னை : நடிகர் விஜய்யின் 65-வது படமான 'பீஸ்ட்' திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Recommended Video
விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள்.

தமிழ் கத்துக்கிட்டு வா
இந்தி மொழி சர்ச்சை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்றுள்ள வசனம் டிரெண்டாகி வருகிறது."சும்மா இந்தியில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது, வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா" என்ற வசனம் இந்த நேரத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

டாக்டர் மாதிரியே
விஜய்யின் பீஸ்ட் படம் டாக்டர் படத்தை போலவே திரைக்கதை ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும், தனது டார்க் காமெடி டிராக்கில் இயக்குநர் நெல்சன் ஸ்கோர் செய்துள்ளார். ரசிகர்கள் தியேட்டரில் சிரித்து மகிழ்ந்து கொண்டாடும் அளவுக்கு படம் உள்ளது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

திருவிழாப்போல
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படம் பீஸ்ட். இன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடினார்கள். ட்விட்டரில் பல ரசிகர்கள் புலி படத்திற்கு பிறகு இந்த படத்தை வெறுக்கிறார் என்றும், படம் வெரி போரிங் என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ஒருமுறை பார்க்கலாம்
நாங்கள் எதிர்பார்த்து போல படம் இல்லை, ஆனால், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் படத்தை கொண்டாடுவார்கள். இருந்தாலும் படம் தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ட்ரால் செய்து வருகின்றனர். விஜய்க்காக படத்தை பார்க்கலாம் மற்றபடி ஒன்னும் இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications