பீஸ்ட் படத்தின் பாடல் வெளியீடு... அபர்ணா தாஸ் என்ன சொல்லியிருக்காங்க!

சென்னை : நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீடு குறித்து படத்தின் நாயகி அபர்ணா தாஸ் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இறுதிகட்டத்தில் பீஸ்ட் படம்

இறுதிகட்டத்தில் பீஸ்ட் படம்

படத்தின் சூட்டிங் ஜார்ஜியா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விறுவிறு சூட்டிங்

விறுவிறு சூட்டிங்

சமீபத்தில் பெய்த மழையால் இந்த படத்தின் சூட்டிங் தாமதமான நிலையில் தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக விரைவில் படக்குழு ஜார்ஜியா செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போஸ்டர் வெளியீடு

போஸ்டர் வெளியீடு

இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர். இதையடுத்து படத்தின் இயக்குனர் சமீபத்தில் படத்தின் நூறாவது நாள் சூட்டிங் நிறைவை அடுத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இசைக்கருவிகள் வாசிப்பு

இசைக்கருவிகள் வாசிப்பு

விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் அந்த புகைப்படத்தில் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் இசைக்கருவிகளை வாசித்தவாறு காணப்பட்டனர்.இந்தப் புகைப்படம் பார்த்தவர்களை உற்சாகமான மனநிலைக்கு கொண்டு சென்றது.

நடிகை அபர்ணா தாஸ்

நடிகை அபர்ணா தாஸ்

படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரும் சமீபத்திய புகைப்படத்தில் பியானோ வாசிப்பதாக இருந்தது.

பாடல் குறித்து அபர்ணா தாஸ்

பாடல் குறித்து அபர்ணா தாஸ்

இந்நிலையில் அபர்ணா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரெடின் கிங்ஸ்லே உடன் தான் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பின்போது தாங்கள் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படம் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் பாடல்

விரைவில் பாடல்

மேலும் விரைவில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X