குடியரசு தினத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் பீஸ்ட் படக்குழு

சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்பொழுது விஜய் ஹீரோவாக நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்

புட்டபொம்மா நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடத்தலை மையமாக

கடத்தலை மையமாக

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கலக்கிக் கொண்டிருப்பவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற அட்டகாசமான படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சனுக்கு முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து தனது நீண்டகால நண்பரான சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். தனது ஒவ்வொரு படங்களிலும் கடத்தலை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் நெல்சன் டாக்டர் படத்திலும் பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலிடம் இருந்து ஒரு டாக்டர் எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதை மையக் கருவாகக் கொண்டு இயக்கியிருந்தார்.

வசூலையும் அள்ளியது

வசூலையும் அள்ளியது

வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக டாக்டர் எடுக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே சிவகார்த்திகேயன் அனைவரையும் கலாய்ப்பார் ஆனால் டாக்டர் படத்தில் முற்றிலும் வித்தியாசமாக அரிதாகவே சிவகார்த்திகேயன் பேசுகின்ற வசனங்களை வைத்திருப்பது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது வசூலையும் அள்ளியது

பீஸ்ட்

பீஸ்ட்

இந்த நிலையில் நெல்சன் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் இருக்க தற்போது தமிழில் உச்ச நடிராக உள்ள விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முகமூடி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஜார்ஜியா, சென்னை,டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் செல்வராகவன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் ஓபனிங் பாடலை எழுத இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்து கொண்டே இருக்க வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X