மூன்றே நாளில் வலிமை வசூலை பீட் செய்த பீஸ்ட்... அண்ணாத்த வசூலையை கடந்தது!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கேஜிஎப் 2 படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் பீஸ்ட் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியிருந்தது. அதற்கு ஏற்றாற்போல படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இது விஜய் படமா அல்லது நெல்சன் படமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்த பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை பார்க்க தயாராக இருந்தனர்.

ஏமாற்றிய நெல்சன்

ஏமாற்றிய நெல்சன்

ஆனால் நெல்சன் அவர்களை ஏமாற்றியுள்ளதாக அவர்கள் விமர்சனங்களை எழுப்பினர். அவரது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் ரிலீசாகி சிறப்பாக அமைந்த நிலையில், இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு அடுத்த நாள் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

அண்ணாத்த, வலிமையை பீட் செய்த பீஸ்ட்

அண்ணாத்த, வலிமையை பீட் செய்த பீஸ்ட்

இதுவும் பீஸ்ட்டின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக தற்போது அமைந்துள்ளது. ஆயினும் படம் சிறப்பா கலெக்ஷன்களை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களில் உலகளவில் ஏறக்குறைய 155 கோடி ரூபாய் வசூலை பீஸ்ட் படம் ஏற்படுத்தியுள்ளது. அண்ணாத்த மற்றும் வலிமை படத்தின் மொத்த வசூலை 3 நாட்களில் பீஸ்ட் கடந்துள்ளது.

3 நாளில் சிறப்பான வசூல்

3 நாளில் சிறப்பான வசூல்

கடந்த பிப்ரவரியில் வெளியான வலிமை படத்தின் மொத்த வசூல் 153 கோடி ரூபாயாக உள்ளது. இதனிடையே, வலிமை, அண்ணாத்த, ஆர்ஆர்ஆர் மற்றும் மாஸ்டர் படங்களின் முதல் 3 நாள் சென்னை வசூலிலும் பீஸ்ட் படமே ரூ.4.98 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

என்றுமே மாஸ் ஹீரோதான்

என்றுமே மாஸ் ஹீரோதான்

நடிகர் விஜய் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் தனக்கான ரசிகர்கள் வட்டத்தை வைத்துக் கொண்டுள்ளார். மேலும் மாஸ் ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்கள் அவரது படத்தின் வசூலை பாதிக்காது என்பதை இந்தப் படத்தின்மூலம் நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X