வெளியானது பீஸ்ட் திரைப்படம்...விஜயகாந்தை நினைவுபடுத்திய விஜய்

பீஸ்ட் திரைப்படம் உலகெங்கிலும் இன்று ரிலீசானது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம். டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ்.

மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் போன்றவை ஏற்கனவே வெளியாகி பல சாதனைகள் செய்தது.

பீஸ்ட் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

இன்று பீஸ்ட் திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சியில் இருந்து தனது கணக்கை துவங்கியுள்ளது. உலக அளவில் ரிலீஸ் ஆன இந்த படம் ரிலீசுக்கு முன்பே பல எதிர்பார்ப்புக்களை கிளப்பி இருக்கிறது. இன்று ரிலீஸ் ஆன பீஸ்ட் 4 மணி காட்சியைப் பார்த்த ரசிகர்கள் , படத்தைப் பற்றிய அவர்களது விமர்சனம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தருகின்றனர். ஒரு தரப்பு ரசிகர்களுக்கு படம் சூப்பர் ஹிட் என தெரிவதாகவும், மற்றொரு தரப்பு ரசிகர்களுக்கு படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லும் படியாகவும் இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே கலவையான விமர்சனம் இருப்பதால் பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் குறித்து பேசிய விஜய்

தமிழ் குறித்து பேசிய விஜய்

ஒரு Mall தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மக்கள் பிணைக்கைதிகளாக இருக்க அங்கே இருக்கும் மக்களை எப்படி விஜய் காப்பாற்றினார் எனும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பீஸ்ட் படத்தில் துப்பாக்கி சத்தம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஒரு காட்சியில் விஜய் தமிழ் பற்றிய ஒரு வசனத்தை பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது " உங்களுக்கு ஹிந்தில எல்லாம் translate பண்ண முடியாது தேவைனா தமிழ் கத்துக்கிட்டு வா " என்று சொல்வது போல வருகிறது. சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழியை குறிப்பிட்டு தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது என சொன்னதை இதோடு இணைத்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

VTV Ganesh

VTV Ganesh

பீஸ்ட் படத்தை தூக்கி நிறுத்தும் ஒரே நபராக நடிகர் விஜய் இருக்கிறார். திரையில் அவரது இருப்பு, டான்ஸ், ஃபைட் என அசத்தியுள்ளார். மற்ற யாரும் தெரியவில்லை என ரசிகர்கள் சொல்கின்றனர். பீஸ்ட் படத்தில் காமெடியனாக வரும் யோகி பாபு பேசும் எந்த வசனத்திற்கும் சிரிப்பு வரவில்லை என்றும் அந்தக் குறையை ஈடு செய்தவர் VTV கணேஷ் என்றும் சொல்கின்றனர். படத்தில் முக்கிய பலமாக அவர் இருக்கிறார் என்பது போல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. முன்பு விவேக் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த செல் முருகன் இதில் ஒரு கதாபாத்திரம் நடித்திருக்கிறார். செல்வராகவனுடன் வரும் அவருக்கு வசனங்கள் ஏதும் தராமல் அவரது கதாபாத்திரத்தை வீணடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் to விஜய்

விஜயகாந்த் to விஜய்

பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, புல்லட், flight chase என தொடர் சண்டைகள் உடன் படம் முடிவடைகிறது. இதனால் படத்தில் பல லாஜிக் மீறப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர். படத்தில் வில்லன்கள் பலபேர் மெஷின்கன் கொண்டு சுட்டாலும் உடம்பில் படாமல் விஜய் தப்பிப்பது, ஒரே ஒரு துப்பாக்கியுடன் விஜய் அனைவரையும் சுட்டுத் தள்ளுவது, பிளைட்டில் தனியாக பாகிஸ்தான் சென்று திரும்புவது போன்ற காட்சிகளை பார்க்கும்போது விஜயகாந்த் நினைவுக்கு வந்தார் எனவும் சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். விஜய் படம் என்றால் லாஜிக் இல்லாத மேஜிக் என்று சிலர் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X