சென்னையில் தொடங்கியது விஜய்யின் பீஸ்ட் பட படப்பிடிப்பு.. கெத்தாய் வந்த பூஜா ஹெக்டே!

சென்னை: விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்பபடத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.

 பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

பீஸ்ட் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறும் என பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது.

பூஜாவுக்கு கொரோனா

பூஜாவுக்கு கொரோனா

ஆனால் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையும் உச்சத்தில் இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

துப்பாக்கியுடன் விஜய்

துப்பாக்கியுடன் விஜய்

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதி வெளியானது. இதில் கையில் துப்பாக்கியுடன் மிரட்டியிருந்தார் விஜய்.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

இந்த போஸ்டர்கள் பெரும் வைரலானது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

Recommended Video

என்னோட BIOGRAPHY யார் DIRECT பண்ணனும் | Actress Sona Chat Part-02 | Filmibeat Tamil
பூஜா ஹெக்டே வருகை

பூஜா ஹெக்டே வருகை

சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்க பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

குட்டி ட்ரவுஸரில் பூஜா

குட்டி ட்ரவுஸரில் பூஜா

குட்டி ட்ரவுஸர் பிளேஸரில் அவர் சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பாடல் காட்சி ஒன்றும் சென்னையில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X