பீஸ்ட் படத்தின் அப்டேட்... ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்?
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட்.
விஜய் பிறந்தநாளில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஆரம்பகட்ட சூட்டிங் ஜியார்ஜியாவிலும் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் சென்னையிலும் நடைபெற்றது. சென்னையில் மிகப்பெரிய மால் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

பீஸ்ட் படம்
பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தில் செல்வராகவன் அரசியல்வாதியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசை
படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிந்து வருகிறர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது சன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதே இடத்தில் சூட்டிங் நடைபெற்ற சூர்யாவும் விஜய்யும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசினர்.

மீண்டும் ஜார்ஜியாவில் சூட்டிங்
இதனிடையே தற்போது பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியாவிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ராணுவ செட் அமைத்து காட்சிகளை எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் சென்னை திரும்பி எஞ்சியுள்ள காட்சிகளையும் எடுத்து படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரியாக விஜய்
படத்தில் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் விரைவில் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

கோடை கொண்டாட்டம்
நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்திற்கான பேச்சுவார்த்தையும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை கொடுப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு செயலாற்றி வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











