‘’சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப்போச்சி’’.. நெல்சனை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil

நள்ளிரவு முதல் இருந்தே ரசிகர்கள் பீஸ்ட் FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். பாலாபிஷேகம், பட்டாசு, டிஜே என தியேட்டர்களை தெறிக்கவிட்டனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளதால், மிகுந்த எதிர்பாபர்ப்புடன் இருந்த ரசிகர்கள் திருப்தி அடையாததால், நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கூர்கா பாருங்க

கூர்கா பாருங்க

யோகி பாபு நடித்த கூர்கா படத்தையே பார்த்துடுங்க.. விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்தால் மண்டைக் கோளாறு வந்துவிடும் என லாஜிக் ஓட்டைகளை பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

லாஜிக்கே இல்லை

லாஜிக்கே இல்லை

பீஸ்ட் திரைப்படம் குறித்து அஜித்தின் ரசிகர்கள் படத்துல லாஜிக்கே இல்லை, டாக்டர் படம் போல இருக்கு என்று கமெண்டுகளை பதிவிட்டு வரும் நிலையில், ஒரு நெட்டிசன்ஸ் வடிவேலுவின் போட்டோவை போட்டு முன்னாடியாவது ஒரு ஆர்மிகிட்டதான் அடி வாங்குவேன் இப்போ எல்லா ஆர்மி கிட்டயும் வாங்குறனே என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

எடுக்காமலே இருந்து இருக்கலாம்

எடுக்காமலே இருந்து இருக்கலாம்

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படமும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நெட்டிசன் நெல்சனை வெச்சு செய்து வருகின்றனர். ஒரு நெட்டிசன்ஸ், இரண்டாவது பாதிய நல்லா எடுத்திருந்துருக்காலம். மொத பாதிய எடுக்காமயே இருந்திருக்கலாம் என பயங்கரமாக கலாய்த்து உள்ளார்.'

கூர்க்கா 2

கூர்க்கா 2

பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்கள் அனைவரும், கூர்கா படத்தின் கதையா? என கேட்டுவந்தனர். ஆனால், நெல்சன் டிரைலரில் வருவது பீஸ்ட் படத்தின் கதையே இல்லை என்றார். இன்று ஆர்வத்துடன் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் என்னடா யோகிபாபுவை வச்சு கூர்க்கா 2 எடுத்து வச்சு இருக்கீங்க என்று பங்கமாக கலாய்த்து உள்ளார்.

சமஸ்தானமே ஆடிப்போச்சி

சமஸ்தானமே ஆடிப்போச்சி

சன் தொலைக்காட்சி விஜய்யின் நேர்காணலை போடும்போதே நினைச்சேன், என்னடா இப்படி ப்ரோமோஷன் பண்றாங்களேனு படத்துல ஒன்னுமே இல்லை என்றும், அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வகோட்டை சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப்போச்சி என நெட்டிசன் பயங்கரமாக நக்கலடித்துள்ளார்.

பீஸ்ட் டிசாஸ்டர்

பீஸ்ட் டிசாஸ்டர்

எதிர்பார்த்த அளவுக்கு பீஸ்ட் படத்தின் திரைக்கதை புதிதாக இல்லை என பீஸ்ட் டிசாஸ்டர் ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கி உள்ளனர். ஏகப்பட்ட காமெடி மீம்களுக்கும் படத்தில் கன்டென்ட் இருப்பதால் வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆவரேஜ்

ஆவரேஜ்

பீஸ்ட் படத்தின் முதல் பாதி ஆக்‌ஷன் பிளஸ் காமெடி கலந்து சென்றது. இரண்டாவது பாதி ரொம்பவே ஸ்லோவாகவும் சுமாராகவும் நகர்ந்தது பெரிதாக ஈர்க்கவில்லை. அதிலும், கடைசி 20 நிமிடங்கள் சொதப்பல். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என இந்த நெட்டிசன் 5க்கு 3 மதிப்பெண்களை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X