இரவு, பகல் பாராமல் சூட்டிங்... பீஸ்ட் படம் பத்தி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே

சென்னை : தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது பீஸ்ட்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் படம் குறித்த அப்டேட்டை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் பீஸ்ட். படத்தின் தலைப்பு, போஸ்டர்கள் உள்ளிட்டவை கடந்த மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலைக்கு முன்னதாகவே ஜியார்ஜியாவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

இரவு படப்பிடிப்பு

இரவு படப்பிடிப்பு

இதில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் பங்கேற்றுள்ளனர். முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இரவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் பிசி

சமூக வலைதளங்களிலும் பிசி

கோலிவுட்டில் இந்த படத்தில் நடித்துவரும் பூஜா ஹெக்டே தெலுங்கில் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களிலும் பாலிவுட்டில் சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சூட்டிங்கில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X