வசூலில் நம்பர் ஒன் வலிமையா? பீஸ்ட்டா?...பிரபலம் சொன்ன பகீர் தகவல்

சென்னை : 2022 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியான படங்களில் வசூலில் முதலிடம் வகிப்பது விஜய்யின் பீஸ்ட் படமா அல்லது அஜித்தின் வலிமை படமா. இது தான் கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் அதிகம் விவாதிக்கப்பட்ட டாப்பிக்காக உள்ளது.

விஜய் ரசிகர்கள், வலிமை வசூலை பீஸ்ட் முறியடித்து விட்டதாக சொல்கிறார்கள். மற்றொரு புறம் அஜித் ரசிகர்கள், இல்லவே இல்லை. வலிமை தான் வசூலில் நம்பர் ஒன் என்கிறார்கள். இன்னொரு தரப்பினர் கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் படங்களுடன் ஒப்பிட்டு வலிமை, பீஸ்ட் ரெண்டுமே படு ஃபிளாப் படங்கள் என்கிறார்கள்.

யார் சொல்றது உண்மை

யார் சொல்றது உண்மை

இதனால் இதில் யார் சொல்வது உண்மை. நிஜமாகவே எந்த படம் வசூலில் நம்பர் ஒன். எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என தெரியாமல் பொதுவாக ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இன்னும் சிலர் இவர் சொல்லும் யூகமாக கணி்ப்புகளை உண்மை என நம்பி தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவதில்லை என்பது போன்ற விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

200 கோடி வசூலித்ததா பீஸ்ட்

200 கோடி வசூலித்ததா பீஸ்ட்

அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. நீண்ட கால ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படம் மொத்தமாக 234 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் அதிக தொகையை வசூல் செய்த படங்களின் பட்டியலில் வலிமை 9 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் முதல் 12 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் உண்மையான வசூல்

பீஸ்ட் உண்மையான வசூல்

ஆனால் இதுவரை சினிமா வர்த்தகர்கள் தரப்பில் கூறப்படும் தகவலின் படி, ரிலீசான 2 வாரங்களில் பீஸ்ட் படம் உலகம் முழுவதும் 152 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 110 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதிலும் இரண்டாவது வாரத்தில் பீஸ்ட் படத்தின் வசூல், வெகுவாக குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

டாப் 5 அதிக வசூல் படங்கள்

டாப் 5 அதிக வசூல் படங்கள்

ஏப்ரல் 24 ம் தேதி நிலவரப்படி, 2022ம் ஆண்டில் தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் பட்டியலில் வலிமை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பீஸ்ட் இரண்டாவது இடத்திலும், ஆர்ஆர்ஆர் மூன்றாவது இடத்திலும், கேஜிஎஃப் 2 நான்காவது இடத்திலும், எதற்கும் துணிந்தவன் 5 வது இடத்திலும் உள்ளன.

உண்மையை உடைத்த பிரபலம்

உண்மையை உடைத்த பிரபலம்

இந்நிலையில் படங்கள் பற்றி பேசி வரும் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனிடம் பேட்டி ஒன்றில் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படம் பீஸ்ட்டா வலிமையா என கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொஞ்சமும் தயங்காமல் அஜித்தின் வலிமை தான் என பதிலளித்துள்ளார். இதை கேட்டு ஷாக்கான பலரும், அப்படியானால் பீஸ்ட் 200 கோடி வசூலை கடந்து விட்டதாக சொல்லப்படுவது எல்லாம் பொய்யா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X