பீஸ்ட் செகண்ட் சிங்கிள்.. விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா எப்படி இருக்கு? ஒரு சின்ன அலசல்!
சென்னை: சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத் இசையமைத்த பீலா பீலா பாடல் போல இருப்பதாகவும், 7அப் விளம்பரம் என்றும் புரமோவை வைத்தே ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகி உள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா எப்படி இருக்கு என்பதை இங்கே பார்ப்போம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெட்டின் கிங்க்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
அனிருத் இசையில் கு. கார்த்திக் வரிகளில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

லேட்டு லேட்டு
தெறி படத்தில் பேபி நைனிகா விஜய்யை பார்த்து லேட்டு லேட்டு லேட்டு என சொல்வது போல 6 மணிக்கு ஷார்ப்பாக வரும் என அலாரம் வைத்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 6.10க்கு மேல் ஜாலியோ ஜிம்கானா வெளியாகி ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.

ஒரு மில்லியன்
பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் ஹிட் அடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை பார்த்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் எத்தனை மில்லியன் வியூஸ் அள்ளும் என்பது தெரியாத அளவுக்கு காட் ஸ்பீடில் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல் டிரெண்டாகி வருகிறது.

ஜாலியோ ஜிம்கானா எப்படி இருக்கு
மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் ஒத்து என்ட்ரி பாடலை பாடமல் குட்டி ஸ்டோரி எனும் தத்துவ பாடலை விஜய் பாடியிருந்தார். அதே போல பீஸ்ட் படத்திலும் அரபிக் குத்து பாடலை பாடமல் ஜாலியோ ஜிம்கானா எனும் தத்துவ பாடலை பாடி உள்ளார். இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும் ஜாலியா மூடை மாற்றும் வகையிலும் கு. கார்த்திக் எழுதிய அழகான வரிகளை விஜய் செம சூப்பராக பாடியும் ஆடியும் இருக்கிறார்.

பூஜா ஹெக்டேவை பிடித்துக் கொண்டு
ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ஜானி மாஸ்டர் வித விதமான ஸ்டெப்புகளை போட்டு கொடுத்திருக்கிறார். அதிலும், ஆரம்பத்திலும் கடைசியிலும் பூஜா ஹெக்டேவை தோளை பிடித்துக் கொண்டு மான் போல துள்ளி நடனம் ஆடும் விஜய்யின் அந்த ஸ்டெப் வேற லெவலில் டிரெண்டாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பிரபலங்கள் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடப் போறாங்கன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

விஜய் அட்வைஸ்
பீஸ்ட்னா என்னன்னு சொல்ல பாடலாசிரியர் கு. கார்த்திக் முனைந்திருப்பது இந்த பாடலின் பிளஸ் என்றே சொல்லலாம். சாதாரண விஷயங்களுக்கு பயப்பட்டு ஒதுங்காமல் துணிந்து நின்றால் ஜெயிக்கலாம் என்கிற புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் பாடல் முழுக்க ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸாக பொழிந்து தள்ளியிருக்கிறார்.

ரொம்ப சூப்பரா இல்லை
அரபிக் குத்து பாடலுடன் ஒப்பிட்டு பார்த்தால், அந்த அளவுக்கு கூட இந்த பாடல் இல்லை என்று தான் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் வாய்ஸ் எப்படி இருந்தாலும், பாடலை வேற லெவல் ரீச்சுக்கு கொண்டு சென்று விடும் என்று விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











