நீங்க விஜயை வச்சி செய்யுங்க.. நான் இவங்கள வச்சு செய்றேன்.. புரோமேவே ஜாலியோ ஜிம்கானாவா இருக்கே!

சென்னை: பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், இயக்குநர் நெல்சனிடம் இருந்து செம காமெடியான ஒரு புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

முதல் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்யின் வாய்ஸ் செம ரகளை செய்திருந்தது.

அந்த பாடலும் வெளியாகி 200 ,மில்லியனை நெருங்கி விட்டது. இந்நிலையில், ஜாலியோ ஜிம்கானா செகண்ட் சிங்கிள் லிரிக் வீடியோ ரிலீசுக்கு முன்பாக வெளியான புரமோவில் நெல்சன் டச் மிஸ்ஸாகி விட்டதே என ஃபீல் செய்த ரசிகர்களுக்காக தற்போது செம காமெடி புரமோ வெளியாகி உள்ளது.

பான்வேர்ல்ட் ஹிட்

பான்வேர்ல்ட் ஹிட்

அரபிக் குத்து பாடலுக்கு விஜய் அசால்ட்டாக நடனமாட நாயகி பூஜா ஹெக்டே, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ரித்திகா சிங் என ஏகப்பட்ட நடிகைகள் நடனமாட உலகளவில் பான் வேர்ல்ட் ஹிட் அடித்து விட்டது அந்த பாடல். கல்லூரிகள், கச்சேரிகள், திருமண விழாக்கள் என அனைத்திலும் ஹலமதி ஹபிபோ என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு வருகின்றனர். பாலைவனத்தில் ஷேக்குகளை அந்த பாடலுக்கு செம ஷேக் செய்து ஆடிய வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

ஜானி மாஸ்டர் டீம்

ஜானி மாஸ்டர் டீம்

இந்நிலையில், ஜானி மாஸ்டர் டீம் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலுக்காக கஷ்டமான ஸ்டெப்களை சொல்லிக் கொடுத்து வர அதை பார்த்து ஷாக்கான இயக்குநர் நெல்சன், இந்த ஸ்டெப்ஸ்லாம் விஜய் சார் தாறுமாறாக ஆடிவிடுவார். இவங்களுக்கு என்ன ஸ்டெப் என கேட்க, ரெட்டிங் கின்ஸ்லி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கும் அதே ஸ்டெப் தான் என ஜானி மாஸ்டர் ட்ரில் எடுக்க அவர்கள் போடும் காப்ரே டான்ஸ் ஆட்டத்தை பார்த்து ஜானி மாஸ்டரே டென்ஷன் ஆகி விடுகிறார்.

சேர்ல உட்கார்ந்துருங்க

சேர்ல உட்கார்ந்துருங்க

பத்து வருஷமா டான்ஸ் ஆடிகிட்டு இருக்கன்னு கதை விட்டியே என ரெட்டின் கிங்ஸ்லியை பார்த்து கலாய்க்கும் நெல்சன் நீங்க யாரும் டான்ஸ் ஆடி மானத்தை வாங்க வேண்டாம் கம்முனு சேர்ல உட்கார்ந்துருங்க என ட்ரோல் செய்யும் செம காமெடியான புரமோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களை வெறியேற்றி உள்ளது.

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil
ஸ்டெப்ஸ் எவ்ளோ டஃப்பா இருந்தாலும்

ஸ்டெப்ஸ் எவ்ளோ டஃப்பா இருந்தாலும்

விஜய் சாரை வச்சி டான்ஸ் ரிஹர்சலை நீங்க செய்யுங்க.. இவங்களை வச்சு நான் செய்யுறேன் என ஜானி மாஸ்டரிடம் தெலுங்கில் பேசி விட்டு காமெடியன்களை நெல்சன் அழைத்துச் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் சன் பிக்சர்ஸ், அதற்கு கேப்ஷனாக ஸ்டெப்ஸ் எவ்ளோ டஃப்பா இருந்தாலும், தளபதி விஜய் பீஸ்ட் மோட்ல இறங்கி ஜாலியோ ஜிம்கானா தரப்போறாரு என கேப்ஷன் கொடுத்து போட்டிருக்கும் வீடியோ இமிடியேட் டிரெண்டாகி விட்டது. 6 மணிக்கு அப்போ அடுத்த வெறித்தனமான குத்து கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X