எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டணும்டா.. குட்டி ஸ்டோரியை தூக்கி சாப்பிட்ட ஜாலியோ ஜிம்கானா!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி உள்ளது.

அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 197 மில்லியன் பார்வைகளுடன் 200 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த ரெக்கார்டை படைக்க பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஆஜர் ஆகி உள்ளது.

விஜய்யின் பீஸ்ட் மோடு

விஜய்யின் பீஸ்ட் மோடு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்த பிளாக்பஸ்டரை கொடுக்க டாக்டர் படத்தை இயக்கி வெற்றியடைந்த இயக்குநர் நெல்சன் உடன் கைகோர்த்தார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தில் நரைத்த தாடியுடன் வித்தியாசமான பீஸ்ட் மோடில் நடித்துள்ளார் விஜய்.

200 மில்லியன் வியூஸ்

200 மில்லியன் வியூஸ்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடலை அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அந்த பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில், ஒரு மாதத்திற்குள் 200 மில்லியன் வியூஸை நெருங்கி விட்டது.

ஜாலியோ ஜிம்கானா

ஜாலியோ ஜிம்கானா

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் புரமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு அடுத்த டிரெண்டிங்கை ஆரம்பித்து விட்டது. பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுதியுள்ள இந்த ஜாலியான பாடலில் விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் நடனம் ஆடுவது போல அந்த புரமோ அமைந்திருந்தது.

பாடியவர் உங்கள் விஜய்

பாடியவர் உங்கள் விஜய்

தொட்டபேட்ட மலை மேல முட்டை பரோட்டா, என்னோட லைலா உள்ளிட்ட பாடல்கள் திரையிடும் போது இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்கிற அறிவிப்பு ரசிகர்களை அப்போது அந்த அளவுக்கு உற்சாகப்படுத்தும். இந்நிலையில், ஜாலியோ ஜிம்கானா பாடலை செம பெப்பியாகவும் ஃபன் மூட் உடனும் விஜய் பாடியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராசம்மா

ராசம்மா

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ராசம்மா பூஜா ஹெக்டே ஒவ்வொரு ஃபிரேமிலும் செம க்யூட்டாக உள்ளார். அரபிக் குத்து பாடலில் அந்த கவர்ச்சி காட்டி நடித்த பூஜா ஹெக்டே இந்த பாடலில் அழகு தேவதையாக வந்து இளைஞர்களை வெகுவாக கவர்கிறார். பீஸ்ட் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் ரசிகர்கள் இப்பவே வெயிட்டிங்கிலேயே வெறியேறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X