புட்டபொம்மாவுக்கே டஃப் தரப்போது பீஸ்ட் பாட்டு… அது என்ன பாட்டு தெரியுமா ?

புட்டபொம்மா... புட்டபொம்மா.... என்று அனைவரையும் முனுமுனுக்க வைத்து இளசுகளை ஆட்டம் போடவைத்த பாடல் புட்டபொம்மா.. இந்தபாடலில் அல்லு அர்ஜூனின் உடையும் ஸ்டைலும் சும்மா தாறுமாறாக இருக்கும்.

அல்லு அர்ஜூனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெறுவதற்கு இந்த பாடல் காரணமாக இருந்தது என்று சொல்லாம்.

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த பாடலுக்கு நடன இயக்குநராக இருந்த ஜானி மாஸ்டர், புட்டபொம்மா பாடலுக்கே டஃப் கொடுக்கப்போகும் பாட்டு ஒன்று வரப்போகுதுனு கலக்கலான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அலா வைகுந்தபுரம்லோ

அலா வைகுந்தபுரம்லோ

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த தெலுங்கு படம், அலா வைகுந்தபுரம்லோ. இதில், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர். த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடலை பார்க்கவும்...ரிப்பீட் மோடில் பாடலை கேட்கவுமே பலர் திரையரங்கு திரும்ப திரும்ப வந்தனர். அனைவரின் வரவேற்பை பெற்ற அலா வைகுந்தபுரம்லோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றுத்தந்தது.

தமனின் இசை

தமனின் இசை

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தமனின் இசை. படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன.யூடியூபில் தற்போது வரை புட்டபொம்ம பாடல் டிராண்டிங்கில் உள்ளது. இந்த பாடலின் அல்லு அர்ஜூன் , பூஜா ஹெக்டேவின் நடன அசைவு அனைவரையும் வியக்க வைத்தது.

பீஸ்ட் படத்தில் செம பாடல்

பீஸ்ட் படத்தில் செம பாடல்

இந்த பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் தற்போது பீஸ்ட் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், புட்டபொம்மா பாடல் இந்தியாவையே அதிரவைத்த பாடலாகும், அந்த பாட்டுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தளபதி விஜய் படத்துல் ஒரு பாடல் இருக்கு என்று கூறியுள்ளார். இந்த தகவலை அடுத்து தளபதியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பீஸ்ட் ரீமிக்ஸ் சாங்

பீஸ்ட் ரீமிக்ஸ் சாங்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ரீமிக்ஸ் பாடல் ஒன்று இடம்பெற்று உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், ஒரு வேலை இந்த பாட்டுத்தான் ஜானி மாஸ்டர் சொன்ன பாட்டா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X