என்னது ட்ரைலரில் இருப்பது பீஸ்ட் கதை இல்லையா?...அதிரடி கிளப்பும் பீஸ்ட் எடிட்டர்!

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தின் எடிட்டர் நிர்மல் படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தமிழில் தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ்,யோகிபாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எடிட்டர் நிர்மல்

எடிட்டர் நிர்மல்

பீஸ்ட் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் டிரைலருக்காக 10 நாட்களாக நானும்,நெல்சன் சாரும் கடுமையாக உழைத்தோம். இந்த டிரைலருக்கு முன் கிட்டத்தட்ட 5 டிரைலர்களை எடிட் செய்தேன். ஒவ்வொரு டிரைலரிலும் ஒவ்வொரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கும். கடைசியாக வெளியான இந்த டிரைலர் 10வது எடிஷன் என்றார். டிரைலரை பார்த்த தளபதி கட்டிப்பிடித்து பாராட்டினார்அது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றார்.

மக்கள் என்ஜாய் பண்ணுவாங்க

மக்கள் என்ஜாய் பண்ணுவாங்க

நெல்சன் அவர்களுடைய பாணி என்னவென்றால், படத்தின் கதை இது தான் என்று டிரைலரில் சொல்லவேண்டும் என்று நினைப்பார். ஆனால், பீஸ்ட் டிரைலரில் கொஞ்சம் தான் காட்டிருக்கோம் ஆனா படம் வேற மாறி இருக்கும் மக்கள் என்ஜாய் பண்ற அளவுக்கு பயங்கரமா இருக்கும். நீங்கள் டிரைலரில் பார்த்ததை விட பத்து மடங்கு சர்ப்ரைஸ் படத்தில் இருக்கும் என்றார்.

கதையே வேற

கதையே வேற

டிரைலரில் இருப்பது பீஸ்ட் கதையே இல்லை, நீங்கள் படத்தை பார்க்கும் போதுதான் அது உங்களுக்கு தெரியும், வழக்கமாக நெல்சன் ஒரு ட்விஸ்டை வெச்சி இருப்பாரு அது தான் படத்தின் ஹைலைட் என்றார். நெல்சன் அடுத்ததாக தலைவர் 169 திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திலும் நான் தான் எடிட்டார். தலைவருடைய படத்தில் வேலை செய்வதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக எடிட்டர் நிர்மல் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வசூலை வாரிக்குவிக்கும்

வசூலை வாரிக்குவிக்கும்

பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் ரசிகர்கள் டிக்கெட்டுகளை இப்போதிலிருந்தே புக்கிங் செய்யத் தொடங்கி விட்டனர். நெல்சனின் முந்தைய படங்களைப் போல இந்த திரைப்படமும் நிச்சயம் வசூலை வாரிக்குவிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X