பீஸ்ட் தெலுங்கு ட்ரெயிலர்... எப்ப வெளியாகுது... சன் பிக்சர்ஸ் அறிவிச்சுருக்காங்க!

ஐதராபாத் : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது தெலுங்கில் ட்ரெயிலர் வெளியீடு குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

 பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் நேற்றைய தினம் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

13ம் தேதி உலகளவில் ரிலீஸ்

13ம் தேதி உலகளவில் ரிலீஸ்

படம் வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பீஸ்ட் திருவிழாவிற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ட்ரெண்டிங்கில் ட்ரெயிலர்

ட்ரெண்டிங்கில் ட்ரெயிலர்

படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலரை தற்போதுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்த யூடியூப், ட்விட்டர் பக்கங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த ட்ரெயிலர். யூடியூபில் 25 மில்லியன் வியூஸ்களை இந்த ட்ரெயிலர் கடந்துள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதையடுத்து அனைத்து மொழிகளிலும் பிரமோஷனை முடுக்கிவிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. தமிழில் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சன் டிவியில் படம் குறித்து பேட்டியளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் பேட்டி

விஜய் பேட்டி

விஜய்யின் இந்தப் பேட்டியை படத்தின் இயக்குநர் நெல்சன் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலும் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. நேற்றைய தினம் வெளியான தமிழ் ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

5ம் தேதி தெலுங்கு ட்ரெயிலர்

5ம் தேதி தெலுங்கு ட்ரெயிலர்

இந்நிலையில் தெலுங்கில் படத்தின் ட்ரெயிலர் வரும் 5ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தமிழ் ட்ரெயிலருக்கே தெலுங்கு மற்றும் கர்நாடக மாநிலங்களில் ரசிகர்கள் மிகுதியான வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தெலுங்கு ட்ரெயிலர் குறித்த அறிவிப்பு அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 சிறப்பான வசூல் எதிர்பார்ப்பு

சிறப்பான வசூல் எதிர்பார்ப்பு

படம் தமிழை போலவே மற்ற மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் மற்ற மாநிலங்களிலும் வசூல்ரீதியாக சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி கேஜிஎப்2 படத்தை தவிர்த்து மற்ற மொழிகளில் எந்தப் படமும் ரிலீசாகாத நிலையில், பீஸ்ட் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X