சொடக்கு போடும் நேரத்தில் விற்றுத் தீர்ந்த பீஸ்ட் டிக்கெட்டுகள்.. பிவிஆர் சினிமாஸ் பயங்கர ஹேப்பி!

சென்னை: மற்ற தியேட்டர்களில் எல்லாம் பீஸ்ட் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி விட்டது பிவிஆர் சினிமாஸில் ஏன் இன்னமும் தொடங்கவில்லை என ரசிகர்கள் பண்ண டார்ச்சரில் நேற்று இரவு பிவிஆர் பீஸ்ட் புக்கிங் ஓப்பன் ஆனது.

சினிமா ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை பிவிஆர் திரையரங்குகள் கொடுத்து வருகின்றன.

லோக்கல் தியேட்டர்களை போல ஏசி என்பது பெயரில் மட்டுமின்றி தியேட்டர் முழுக்க வியாபித்து இருக்கும்.

பீஸ்ட் புக்கிங்

பீஸ்ட் புக்கிங்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஏப்ரல் 13ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து இடங்களிலும் டிக்கெட்டுகள் கடகடவென விற்றுத் தீர்ந்து வருகின்றன. புக் மை ஷோவில் RRR படத்தை தொடர்ந்து பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டி வருகின்றன.

பிவிஆரில் பீஸ்ட்

பிவிஆரில் பீஸ்ட்

3 நாட்களுக்கு முன்னதாகவே மற்ற தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிவிஆரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகவே இல்லையே என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்கிற விதத்தில் நேற்று இரவு பிவிஆர் பீஸ்ட் படத்துக்கான டிக்கெட் புக்கிங்கை தொடங்கியது.

சொடக்கு போடும் நேரத்தில்

சொடக்கு போடும் நேரத்தில்

ஏப்ரல் 13க்கான டிக்கெட் புக்கிங் சொடக்கு போடும் நேரத்தில் விற்றுத் தீர்ந்தன என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி அதிரடி காட்டி உள்ளனர். மேலும், சன் பிக்சர்ஸ் போட்ட ட்வீட்டை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளுடன் போட்டோக்களை எடுத்தும் ஷேர் செய்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு ஹவுஸ்ஃபுல்

ஒரு வாரத்திற்கு ஹவுஸ்ஃபுல்

பிவிஆரில் படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இதற்கு மேல் டிக்கெட் வாங்க வேண்டும் என்றால் அடுத்த வாரம் தான் புக் பண்ணவே முடியும். அந்த அளவுக்கு புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஹவுஸ்ஃபுல் புக்கிங்காக மாறியுள்ளது. சில இடங்களில் மட்டும் எங்கேயே ஓரிரு டிக்கெட்டுகள் இன்னமும் உள்ளன அதுவும் இன்னும் சற்று நேரத்தில் காணாமல் போய் விடும்.

Recommended Video

'அடடா Vijay போயிருக்கலாம்!' Beast Movie Team In Hyderabad | Vijay | Pooja Hegde | Tamil Filmibeat
வசூல் விஜய்

வசூல் விஜய்

நடிகர் விஜய்யின் அந்த கேஷுவலான பேட்டியை பார்த்த நிலையில், டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே, மின்னல் வேகத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை விஜய் பீஸ்ட் படம் மூலம் நிரூபிக்க உள்ளார். தமிழ்நாட்டில் கேஜிஎஃப் படத்தை விட பீஸ்ட் படம் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நல்ல வசூல் வரும் என்பது கன்ஃபார்ம். டாக்டர் அளவுக்கு இல்லை அதற்கு மேல் படம் என்கேஜிங்காக இருந்து விட்டால் போதும், ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் திருவிழா தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X