ஓடிடியில் ரிலீசாகும் பீஸ்ட்...ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : தியேட்டரை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். டிஜிட்டலிலும் பீஸ்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்த பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

250 கோடி வசூலை கடந்தது

250 கோடி வசூலை கடந்தது

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. டைரக்டர் நெல்சன் திலீப்குமார், விஜய்யை மட்டுமே மனதில் வைத்து திரைக்கதை அமைத்ததால் சொதப்பி விட்டார் என திரையுலகை சேர்ந்த பலரும் குற்றம்சாட்டினர். இருந்தாலும் பீஸ்ட் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்ததால் இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

விருந்து கொடுத்த விஜய்

விருந்து கொடுத்த விஜய்

பீஸ்ட் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததை கொண்டாடும் விதமாக விஜய், படக்குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து விருந்து கொடுத்தார். இந்த போட்டோவை பகிர்ந்து நெல்சன் உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர். இந்த போட்டோ செம டிரெண்டானது.

அரபிக்குத்து வீடியோ பாடல்

அரபிக்குத்து வீடியோ பாடல்

இந்நிலையில் பீஸ்ட் படம் ரிலீசாகி 25 நாட்களுக்கு மேல் ஆனது முன்னிட்டு, படத்தின் பாடல் வீடியோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் அரபிக்குத்து பாடல் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அரபிக்குத்து பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியிட்ட போதே 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. தற்போது இந்த வீடியோ பாடலும் அதிக பார்வைகளை பெற்றுள்ளது.

Recommended Video

Beast team-க்கு Success Party தந்த Vijay |Filmibeat Tamil
 ஓடிடி.,க்கு வரும் பீஸ்ட்

ஓடிடி.,க்கு வரும் பீஸ்ட்

இந்நிலையில் பீஸ்ட் படம் தியேட்டரில் ரிலீசாகி 28 நாட்களில் மே 11 ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது. நள்ளிரவு 12 மணிக்கு சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் பீஸ்ட் படம் வெளியிடப்பட உள்ளது. இதனால் ஓடிடி.,யில் படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X