வெளியானது பீஸ்ட் படத்தின் ட்ரைலர்…அச்சு அசல் அந்த படத்தின் சாயல் இருக்கே.
சென்னை : இரண்டு நாட்களாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மில்லியன் களில் பார்வைகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் படம். சன் பிக்சர்ஸ் இதை தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க செல்வராகவன், யோகி பாபு, கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பீஸ்ட் பட டிரைலர் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் படம் வேறு ஒரு ஆங்கில படத்தின் சாயலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

சுற்றி வளைக்கப்படும் Mall
பீஸ்ட் படத்தின் டிரைலர் முதல் பிரேமே அட்டகாசமாக ஆரம்பிக்க அதில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் குரலில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். தீவிரவாதிகள் ஒரு பெரிய Mall யை சுற்றி வளைத்து உள்ளே இருக்கும் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக சொல்லி முடித்து ஆனால் உள்ள நம்ம பையன் ஒருத்தன் இருக்கான் எனும்போது விஜய் அறிமுகமாக மொபைல் முன்பே நம்மை விசில் அடிக்க வைக்கிறது.

விஜய் நெல்சன் கூட்டணி
பீஸ்ட் படத்தின் டிரைலர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. கோடாரி, துப்பாக்கி, Fighter flights, மெஷின் கன், chasing என ஸ்கிரீன் தெறிக்கிறது. இது முழுக்க முழுக்க விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்று முன்னொரு இன்டர்வியூவில் நெல்சன் திலீப் குமார் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்று பீஸ்ட் ட்ரைலர் பார்த்ததும் தெரிகிறது. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என சொல்லப்படுகிறது.

Die-hard சாயலில் உள்ள பீஸ்ட் ட்ரைலர்
பீஸ்ட் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகி தெறிக்கவிடும் அதே சமயத்தில் இது 1988 ஆம் ஆண்டு ரிலீசான Die Hard பட சாயலில் உள்ளதாக நெட்டிசன்கள் பேசிவருகின்றனர். 1988ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் புரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து இருப்பார். லாஸ் ஏஞ்சலஸ் ல் உள்ள Plaza வை மொத்தமாக சுற்றிவளைத்து உள்ளிருக்கும் ஆட்களை பிணைக்கைதிகளாக மாற்ற அதற்கு முன்னரே படத்தின் கதாநாயகன் ஆனா ப்ரூஸ் வில்லிஸ் அதே பில்டிங்கில் வேறு ஒரு இடத்தில் மறைந்து இருப்பார்.
Recommended Video

கதை மற்றும் கதைக்களம்
அவர் அங்கிருக்கும் பிணைக்கைதிகளை எப்படிக் காப்பாற்றினார் என்பது பரபரப்பான மீதி கதை. பீஸ்ட் மற்றும் die-hard படங்கள் கதை மற்றும் கதைக்களம் ஏறத்தாள ஒன்றாக இருப்பதாக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











