சொல்லியடிச்ச கில்லி.. 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்.. வலிமையை ஓரங்கட்டிய பீஸ்ட் டிரைலர்!
சென்னை: விஜய்யின் பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி 6 மணிக்கு வெளியான நிலையில், ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணிக்குள் 30 மில்லியன் வியூஸை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் டிரைலர் படைத்த சாதனை குறித்த ட்வீட்டை போட்டு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரிப்பீட் மோடில் பீஸ்ட் டிரைலரை உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பார்த்து இந்த ரெக்கார்ட்டை படைத்துள்ளனர்.
30 மில்லியன் வியூஸ்
ஈஸ்ட் கோஸ்ட் மாலில் நடக்கும் ஹைஜாக்கை வீரராகவன் எப்படி வேட்டை ஆடி தடுக்கிறார் என்கிற கதையுடன் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் அதிரடியான டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இந்நிலையில், ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணிக்குள் 30 மில்லியன் ரியல் டைம் வியூஸ் அள்ளி பீஸ்ட் டிரைலர் அபார சாதனையை படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

2.2 மில்லியன் லைக்ஸ்
30 மில்லியன் வியூஸ் 3 மில்லியன் லைக்குகளை ஒரே நாளில் தட்டித் தூக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் வைத்த டார்கெட்டில் வியூஸ் கிடைத்து விட்டது. ஆனால், லைக்ஸ் 2.2 மில்லியன் உடன் நிற்கிறது. இதுவும் சிறப்பான ரெக்கார்ட் தான் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பீஸ்ட் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

3 ,மாதங்கள் ஆகியும்
நடிகர் அஜித்தின் வலிமை டிரைலர் வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் வெறும் 23 மில்லியன் வியூஸ் மற்றும் 1.6 மில்லியன் லைக்ஸ் மட்டுமே பெற்றிருக்கிறது. வலிமை பட டிரைலரை யூடியூப் வியூஸ் போட்டியில் ஒரே நாளில் அடித்து துவம்சம் செய்துள்ளது விஜய்யின் பீஸ்ட் டிரைலர். அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்துப் போட்டு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

கேஜிஎஃப் டிரைலர்
ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகவுள்ள கேஜிஎஃப் படத்தின் கன்னட டிரைலர் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், அதன் மொத்த வியூஸ் 25 மில்லியனை நெருங்கி உள்ளது. கேஜிஎஃப்பின் தமிழ் டிரைலர் 20 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இந்த இரண்டு ஏரியாக்களிலும் பீஸ்ட் டிரைலர் கேஜிஎஃப்பை பின்னுக்கு தள்ளி இருந்தாலும், கேஜிஎஃப் இந்தி டிரைலர் 7 நாட்களில் 75 மில்லியன் உடன் முன்னணியில் உள்ளது. பீஸ்ட் படத்தின் மற்ற மொழி டிரைலர்களை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Recommended Video

வசூலில் முந்துமா
வலிமை படத்தின் டிரைலர் சாதனையை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ள நிலையில், வலிமை படத்தின் முதல் நாள் வசூலை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சர்கார், பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து வலிமை சாதித்துள்ள நிலையில், வலிமை படத்தின் வசூலை வரும் ஏப்ரல் 13ம் தேதி முறியடிக்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











