Beast Trailer: வெளியானது பீஸ்ட் டிரைலர்.. வேற லெவலில் மிரட்டும் விஜய்.. நெல்சனின் தரமான சம்பவம் இதோ!
சென்னை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் டிரைலர் தற்போது வெளியாகி யூடியூப் தளத்தை திணறடித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஆக்ஷன் பிளஸ் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது என்பதை டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.

பீஸ்ட் டிரைலர் வந்துடுச்சு
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் செம மாஸாக நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. காலையில் இருந்தே ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பீஸ்ட் டிரைலர் அப்டேட்களை போட்டு அசத்தி வந்த நிலையில், பீஸ்ட் டிரைலர் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ரிப்பீட் மோடில் பீஸ்ட் டிரைலரை பார்த்து வருகின்றனர்.

வேறலெவல் விஜய்
நடிகர் விஜய் காமெடியாக இருந்தாலும் ஆக்ஷனாக இருந்தாலும் வேறலெவலில் மிரட்டி எடுப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏற்கனவே அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களில் விஜய்யின் லுக் மற்றும் நடனத் திறமையை பார்த்து வியந்த ரசிகர்கள் வெறித்தனமான ஆக்ஷன் மோடில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்து மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

நெல்சன் சம்பவம்
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு படங்களிலும் டார்க் காமெடியை வைத்து அசத்திய இயக்குநர் நெல்சன் ஆக்ஷனை கொஞ்சமாகத்தான் பயன்படுத்தி இருப்பார். ஆனால், இது விஜய் படம் என்பதால், டார்க் காமெடி பிளஸ் ஆக்ஷன் என ஃபிரேமுக்கு ஃப்ரேம் மிரட்டி இருப்பது பீஸ்ட் படத்தின் டிரைலரிலேயே தெளிவாக தெரிகிறது.
ரெக்கார்டுகள் உடையும்
இதற்கு முன் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் ரெக்கார்டுகளை நிச்சயம் பீஸ்ட் படத்தின் இந்த வெறித்தனமான டிரைலர் உடைத்து புதிய ரெக்கார்டுகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் 30 மில்லியன் வியூஸ் மற்றும் 3 மில்லியன் லைக்ஸ்களை விஜய் ரசிகர்கள் டார்கெட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











