பீஸ்ட் அப்டேட்டா? தலைவர் 169 அப்டேட்டா? நாளை நெல்சன் என்ன சொல்ல போகிறார்? கடுப்பான விஜய் ரசிகர்கள்!

சென்னை: பீஸ்ட் ஹாஷ்டேக் கூட போடாமல் வெறும் "நாளை" என்று மட்டும் இயக்குநர் நெல்சன் ட்வீட் போட்டிருப்பது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

நாளை பீஸ்ட் படத்தின் டிரைலர் அப்டேட் வருமா? அல்லது தலைவர் 169 படத்தின் காஸ்ட் அப்டேட் வருமா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

#NelsonDilipkumar ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் கன்ஃபார்ம் பண்ணுங்க நெல்சன் அண்ணா என்றும் கடுப்பில் திட்டியும் ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

சஸ்பென்ஸ் வைத்த நெல்சன்

சஸ்பென்ஸ் வைத்த நெல்சன்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் அடுத்ததாக தலைவர் 169 என நடிகர் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், வெறும் "நாளை" என மட்டும் தற்போது ட்வீட் போட்டிருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. #Beast ஹாஷ்டேக் கூட நெல்சன் போடாத நிலையில், தான் இந்த குழப்பமே ஏற்பட்டுள்ளது.

தலைவர் 169 அறிவிப்பா

தலைவர் 169 அறிவிப்பா

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா அருள் மோகன் தலைவர் 169 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகி உள்ள நிலையில், அது தொடர்பான காஸ்ட் அப்டேட் தான் நாளை நெல்சன் சொல்லப் போகிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சரியான டைமிங்கில் விஜய் ரசிகர்களை வம்பிழுத்துள்ளனர்.

ரொம்ப நன்றி

ரொம்ப நன்றி

நாளை கண்டிப்பா விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட்டை தான் இயக்குநர் நெல்சன் சொல்வார் என விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இயக்குநர் நெல்சன் ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

இன்றை இழக்காதே

இன்றை இழக்காதே

நடிகர் விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாடலில் நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே என பாடியிருப்பார். அந்த வரிகளை விஜய் ரசிகர்கள் போட்டு இயக்குநர் நெல்சனை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்ன அன்சீனோ

என்ன அன்சீனோ

நாளைக்கு என்ன அன்சீன் ஸ்டில்லோ தெரியலையே என துப்பாக்கி பட ஸ்டில்லை போட்டு வேற லெவலில் பங்கமாக நெட்டிசன்கள் இயக்குநர் நெல்சன் தெளிவாக போடாத ட்வீட்டை ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் நாளைக்கு நிச்சயமாக தலைவர் 169 அப்டேட் தான் வரும் என்று விஜய் ரசிகர்களை ஓட்டி வருகின்றனர். நாளைக்குத் தான் என்ன ஆகுமோ? அப்டேட் யாருக்கு கிடைக்குமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X