வீர ராகவனா? ராக்கி பாயா? மோதல் ஆரம்பம்...ட்ரெண்டாகும் veeraragavan ஹாஷ்டேக்!

சென்னை : விஜய்யின் பீஸ்ட் படத்துடன் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 படம் மோத உள்ள நிலையில் #veeraragavan ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக பொங்கலுக்கு ரிலீசாக இருந்த ஆர்.ஆர்.ஆர், வலிமை, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பிப்ரவரி மாதமே வெளியாகின.

அந்த வகையில் முதலாவதாக வெளியான பெரிய படம் என்றால் அது அஜித்தின் வலிமை தான். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியான இப்படம் வெறிச்சோடி கிடந்த திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டத்தை வர வைத்து புத்துயிர் கொடுத்தது.

பீஸ்ட்

பீஸ்ட்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் சுமார் 850 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

கடந்த ஆண்டே வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யஷ்ஷின் கேஜிஎஃப் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுக்க வெளியாகிறது. கேஜிஎஃப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது கேஜிஎஃப் சாப்டர் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

ஆதிக்கம் செலுத்தும் கே.ஜி.எஃப்2

ஆதிக்கம் செலுத்தும் கே.ஜி.எஃப்2

ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கேஜிஎஃப் 2 உள்ளது. தமிழகம் தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கே.ஜி.எஃப் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அதன் புரமோஷனும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Recommended Video

KGF and Beast ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆதி | Siddy audio launch
வீர ராகவனா? ராக்கி பாயா?

வீர ராகவனா? ராக்கி பாயா?

விஜய்யின் பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளது, கேஜிஎஃப் 2 நாளை மறுநாள் வெளியாக உளளது. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளதால் நாடு முழுவதும் இந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தளபதி மற்றும் யாஷின் ரசிகர்கள் வீர ராகவனா? ராக்கி பாயா? மோதல் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், தளபதியின் தீவிர ரசிகர்கள் #veeraragavan ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X