விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துடன் கேஜிஎஃப்-2 மோதலா?....யாஷ் சொன்ன அசத்தல் பதில்
பெங்களுர் : பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2 மோதல் விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகர் யாஷ் அளித்துள்ள பதில், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தற்போது இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை குவித்துவைத்துள்ளார்.
தற்போது கே ஜி எஃப்-2 டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பிக் வருகிறது. டிரைலர் வெளியீட்டு விழா பெங்களுரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு யாஷூக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய யாஷிடம், பிலிமிபீட் செய்தியாளர் வினோத், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் கேஜிஎஃப் திரைப்படமும் ஒன்றாக வெளியாக உள்ளது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த யாஷ், இது தேர்தல் கிடையாது, தேர்தல் என்றால் அனைவர் இடத்திலும் ஒரே ஒரு ஓட்டு இருக்கும் அந்த ஓட்டு யாருக்கு என்பதற்காக சண்டை போட வேண்டும். ஒருவர் ஜெயித்தால், மற்றொருவர் தோற்க வேண்டும். ஆனால் இது சினிமா, அவர் படமும் பார்க்கலாம், என் படமும் பார்க்கலாம் என்றார்.

விஜய் படத்தை நான் பார்ப்பேன்
விஜய் ஒரு மூத்த நடிகர் அவரின் திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும், இணையத்தில் பல மோதல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த மோதலை யாரும் பண்ண வேண்டாம் என்றார். விஜய் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பார்கள், அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என் படம் பிடிக்கும். எல்லோரும் என் படத்தை பார்க்கட்டும் நானும் பீஸ்ட் படத்தை பார்க்கிறேன் என்று பதிலளித்தார்.

திருவிழாப்போல கொண்டாடலாம்
கேஜிஎஃப் 2 பான் இந்தியா மூவி என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதே நேரத்தில் விஜய் சாரின் திரைப்படமும் வெளியாக உள்ளதால், நிச்சயம் அது ஒரு திருவிழாப்போல இருக்கும். இதை ஒரு போட்டியாக பார்க்காமல் அனைவரும் இணைந்து திரைப்படத்தை கொண்டாடலாம் என்று அழகான தமிழில் பேசி அசத்தினார் யாஷ்.

விஜய் ரசிகர்கள் ஹேப்பி
பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2 மோதல் விவகாரம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பி வரும் நேரத்தில் யாஷின் கூலான பதில் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாஷ் சொன்னது போல இருவரின் படங்களையும் திருவிழாப்போல கொண்டாட ரசிகர்கள் இப்போதே ரெடியாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











