பெட்ரோல் ஃப்ரீன்னு சொல்லியும் ஒருத்தனும் வர மாட்றானுங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்.. பீஸ்ட் மீம்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தையும் கேஜிஎஃப் 2 படத்தையும் ஒப்பிட்டு ஏகப்பட்ட மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
பீஸ்ட் மற்றும் கேஜிஃப் 2 மோதல் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் பீஸ்ட்டுக்கு கேஜிஎஃப் 2 மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டு வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்திற்கு குறைவான காட்சிகளே முதலில் ஒதுக்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது கேஜிஎஃப் படத்துக்கு அதிக தியேட்டர்களும் காட்சிகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

பெரிய ஸ்க்ரீனில் கேஜிஎஃப் 2
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், அந்த படத்தை பார்க்க மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. இந்நிலையில், கமலா சினிமாஸ் உள்ளிட்ட பல பெரிய திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 படத்தை மெயின் ஸ்க்ரீனுக்கு மாற்றி பீஸ்ட் படத்தை சின்ன ஸ்க்ரீனுக்கு தள்ளி உள்ளனர்.

தவறான முடிவு
சரியான திட்டமிடல் இல்லாமல் சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தை கேஜிஎஃப் 2 படத்துடன் ரிலீஸ் பண்ணது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரிய படங்களுடன் போட்டி இல்லாத நேரத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தால், நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருக்கும் தியேட்டர்களும் பீஸ்ட் படத்தை ஓட்டி இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

பெட்ரோல் ஃப்ரீன்னு சொல்லியும்
கேஜிஎஃப் 2 படத்துக்கு கூட்டம் அள்ளுகிறது என்றும் பீஸ்ட் படத்துக்கு பெட்ரோல் ஃப்ரீன்னு சொல்லியும் ஒருத்தனும் டிக்கெட் வாங்க வரமாட்டுறானுங்களே என புலம்புவது போன்ற மீம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், ராக்கி பாய் கருடன் கோட்டைக்கே புகுந்து அவனை போட்டுத் தள்ளியது போல கோலிவுட்டிலேயே விஜய்யின் வசூலை காலி செய்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்ட்டில் இணைந்துள்ளது. ஜாலியாக படம் பார்க்க தியேட்டருக்கு செல்பவர்கள் இப்போதும் கேஜிஎஃப் 2வை விட பீஸ்ட் படத்துக்குத் தான் செல்கின்றனர் என விஜய் ரசிகர்கள் வீடியோக்களுடன் ட்வீட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











