Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘வலிமை‘யை அடித்து தூக்கிய பீஸ்ட்… ஆரம்பமே இப்படினா ?... மெயின் பிக்சரில் சம்பவம் தான்!
சென்னை : வலிமைப் படத்தின் டிரைலர் சாதனையை பீஸ்ட் டிரைலர் வெறும் 24 மணி நேரத்தில் அடித்து தூக்கி உள்ளது.
இதனை தளபதியின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி குஷியில் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டு வருகின்றனர்.
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட்
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்தியில் டிரைலர் ரிலீஸ்
தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 'ரா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியிலும் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

மாஸ் டிரைலர்
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் 2ந் தேதி மாலை 6 மணிக்கு மாஸாக வெளியானது. ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மக்கள் பலரை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருக்கிறார்கள் அவர்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. பீஸ்ட் படத்தின் முழு கதையும் இந்த மாலுக்குள்ளேயே தான் நகரும் என்பது டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளை விஜய்யின் ரசிகர்கள் ரசித்து ரசித்து ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

வலிமை‘யை அடித்து தூக்கிய பீஸ்ட்
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் 3 மாதங்களில் யூடியூப் 23 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. ஆனால், பீஸ்ட் வெறும் 24 மணி நேரத்தில் வலிமை ட்ரெய்லரின் யூடியூப் பார்வைகளை ஒன்றுமில்லாமல் அடித்து தூக்கி உள்ளது. ஆரம்பமே இப்படினா ... மெயின் பிக்சரில் நிச்சம் சம்பவம் தான் என்று ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியில் படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.