தமிழகத்தில் ‘பீஸ்ட்‘ எத்தனை தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா?.. அப்போ கேஜிஎஃப் 2 படத்திற்கு?
சென்னை : விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பீஸ்ட் படத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கேஜிஎஃப் 2 படத்திற்கும் தமிழகத்தில் அதிக வரவேற்பு உள்ளது.
ஆனால், விஜய் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், கேஜிஎஃப் 2 படம் வெளியாகும் திரையரங்குகள் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாஸ் டிரைலர்
இத்திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில், செல்வராகவனின் வசனங்கள் ட்ரெய்லரில் தெறிக்கவிட்டிருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகளும் ஜெட் விமானத்தை விஜய் இயக்கும் காட்சிகளும் இப்படத்தின் ட்ரெய்லரில் மாஸாக அமைந்துள்ளது.

நெல்சனின்
கோலமாவு கோகிலா,டாக்டர் திரைப்படங்களைப் போல இப்படத்திலும் கடத்தலே மையமாக வைக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் மாலில் பொதுமக்களை கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப் போராடும் வீரராகவனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம்13ந் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஏற்கனவே புக்கிங்கை தொடங்கிவிட்டனர்.

800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்
விஜயின் பீஸ்ட் படத்தை அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதை சரியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ள பீஸ்ட் வினியோக நிறுவனம், அந்தப் படத்தை 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு அதிகமான திரையரங்கில் வெளியாகும் திரைப்படம் பீஸ்ட் தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பெருமையாக பேசிவருகின்றனர்.

அதிருப்தியில் ரசிகர்கள்
இதேபோல, யாஷின் பிரம்மாண்டமான நடிப்பில் உருவான கே.ஜி.எஃப். சாப்டர் 2, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தை போல கேஜிஎஃப் படத்திற்கும் தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், விஜய் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் கேஜிஎஃப் படத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கேஜிஎஃப் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











