இந்த தேதியில் தான் வெளியாகிறதா தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்.. பரபரக்கும் தகவல்கள் Beast

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சம்மர் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், பீஸ்ட் படத்தை ரசிகர்கள் ஏப்ரல் 14ம் தேதி எதிர்பார்த்து வருகின்றனர்.

வியாழக்கிழமை வருவதால் ரிலீசுக்கு சரியான நாள் என்பதால் படக்குழுவும் அந்த முடிவில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய்யின் பீஸ்ட் மோட்

விஜய்யின் பீஸ்ட் மோட்

சும்மாவே தளபதி விஜய்யின் படங்கள் என்றால் பீஸ்ட் மோடில் தான் இருக்கும். இந்த முறை இயக்குநர் நெல்சன் படத்தின் பெயரையே பீஸ்ட் என வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகரித்துள்ளார். டாக்டர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியைத் தொடர்ந்து டார்க் காமெடியில் தளபதி விஜய்யை காண போகிறோம் என ரசிகர்கள் தயாராகி உள்ளனர்.

ஏப்ரல் 14

ஏப்ரல் 14

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரவைக்கும் ரசிகர்கள்

அதிரவைக்கும் ரசிகர்கள்

Beast எனும் ஹாஷ்டேக்கை காலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து இணையத்தை அதிர வைத்து வருகின்றனர். எந்த படம் போட்டியாக வந்தாலும் விஜய் படம் தான் வசூல் வேட்டை நடத்தும் என ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் டவுட்டு தான்

பொன்னியின் செல்வன் டவுட்டு தான்

ஏப்ரல் 14ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம் பீஸ்ட் உடன் மல்லுக்கட்ட காத்திருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் விஜய் சந்திப்பு

புதுச்சேரி முதல்வர் விஜய் சந்திப்பு

நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதன் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். விரைவில் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக நடிகர் விஜய் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

காதலர் தினத்துக்கு

காதலர் தினத்துக்கு

மேலும், பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 13ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வரும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த முறை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என்றும் டான் படத்தின் 'பே' சாங், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 4வது சிங்கிள் மற்றும் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் என இம்மாதம் அனிருத் மாதம் என ரசிகர்கள் ஐஸ் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X