அழகு சமந்தா…… அசத்தல் சூர்யா…

By Mayura Akilan

சமந்தா என்னா அழகு.... அந்த அழகுக்காகவே 4 கதைகளிலும் சமந்தாதான் ஹீரோயின்தான் என்று என் மனம் முடிவெடுத்துவிட்டு என்று இயக்குநர் லிங்குசாமி டிவி நிகழ்ச்சி ஒன்றிர்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நாங்க ஒரு குடும்பத்துக்கு மட்டும் சமைக்கவில்லை. மிகப்பெரிய விருந்து சமைத்தோம். அந்த விருந்து யாருக்கு பிடிக்கும் என்று பரிமாறினாமோ, அவர்களுக்குப் பிடித்துவிட்டது எனவே அஞ்சான் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றார் லிங்குசாமி.

அஞ்சான் படம் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து செய்த படம்... இது மிகப்பெரிய வெற்றிப்படம்தான். நல்ல வசூல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

அஞ்சான் வெளியான நாள்முதலே இணையதளங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் அஞ்சான் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே வெளியானது.

படம் பார்த்துவிட்டு குறை சொல்லுங்கள் என்று சூர்யாவே கூறும் அளவிற்கு மோசமான கருத்துக்கள் பதிவிடப்பட்டன. பத்துநாளில் நல்ல வசூல் என்று மீண்டும் சன் டிவி மூலம் பேட்டி அளித்துள்ளனர் லிங்குசாமியும், சூர்யாவும்.

என்ன பட்டம் கொடுக்கலாம்?

என்ன பட்டம் கொடுக்கலாம்?

அஞ்சான் படம் மூலம் சூர்யா ஒரு மாஸ் ஹீரோ அளவிற்கு உயர்ந்து விட்டார். அவருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்க, என்னோட அப்பா, அம்மா வச்ச பேரு சரவணன், சினிமாவுக்காக சூர்யாவாக மாறியிருக்கிறேன். இதுவே எனக்குப் போதும் என்றார் சூர்யா.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வாரணம் ஆயிரம் படம் ரசித்து ரசித்து செய்தேன்... எத்தனை பேர் விரும்பினார்கள்? இப்போது அதை கேட்கிறார்கள். அஞ்சான் படம் ரசித்து செய்த படம். அது எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்துகிறது என்றார் சூர்யா.

எங்களுக்கு வெற்றி

எங்களுக்கு வெற்றி

அஞ்சான் படம் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. நாங்கள் யாரை குறிவைத்து படம் எடுத்தோமோ? அவர்களை படம் சென்றடைந்திருக்கிறது அது போதும் எங்களுக்கு என்றார் லிங்குசாமி.

கவர்ச்சி ஏன்?

கவர்ச்சி ஏன்?

மும்பையில் உள்ள மாடர்ன் பெண்கள் இதுபோலத்தான் உடை அணிவார்கள் என்பது சமந்தாவிற்கு தெரியும். அதுபோல உடைகளைத்தான் அவர் அணிந்து நடித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் கவர்ச்சி அவசியமாகிவிட்டது என்றார் லிங்குசாமி.

அழகு சமந்தா… அசத்தல் சூர்யா

அழகு சமந்தா… அசத்தல் சூர்யா

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் சமந்தாவின் அழகு மிளிர்கிறது... சூர்யாவின் ஸ்டைல் அதிகரித்துள்ளது என்றும் கூறினார் இயக்குநர் லிங்குசாமி.

நல்லாதானே இருக்கு

நல்லாதானே இருக்கு

பேட்டியைப் பார்த்த சூட்டோடு படம் பார்க்க போன போது... தியேட்டரில் கூட்டம் நிரம்பித்தான் வழிந்தது. படம் நல்லாதானே இருக்கு? அப்புறம் ஏன் மொக்க படம்னு எல்லாரும் எழுதுறாங்க? இதைவிட மொக்க படத்துக்கெல்லாம் நல்லா விமர்சனம் எழுதியிருக்காங்களே என்று எனக்குத் தோன்றியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X