For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஸ்வர்யாராய் பச்சனின் மினுமினுக்கும் சருமத்தின் ரகசியம் வீட்டு கிச்சன்லேயே இருக்காம்

|
Aishwarya Rai Beauty Tips And Secrets Revealed

சென்னை: ஐஸ்வர்யா பச்சனின் மினுமினுப்பான சருமத்தின் ரகசியம் பற்றி கேட்டதற்கு அவர் கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அனைவரது சமயலறையிலும் எளிதாக கிடைக்கக்கூடிய வழக்கமாக பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஒரு பியூட்டி பேக் மூலம் அழகான தெளிவான சருமத்தை பெறலாம் என்றார். கடலை மாவு, மஞ்சள் மற்றும் கிரீம் சேர்த்த கலவையை உலக அழகிகளே பயன்படுத்தி பளபளப்பாக இருக்கிறார்கள். இது போன்ற பியூட்டி பேக்கை நாம் ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது.

உலகில் ஏழு அல்ல அதிசயங்கள், வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே என்று கச்சிதமாக பாடல் வரிகளை தொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

Beautiful skin with the ingredients in the kitchen- Aishwarya Bachchan

பாடல் வரிகளுக்கு ஏற்ப உச்சக்கட்ட அழகு தேவதை கடந்த 1994ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்ட் ஐஸ்வர்யா ராய். அமிதாப் பச்சன் குடும்பத்தின் மருமகள் என்ற மற்றுமொரு அடையாளத்தை கொண்டவர். தனது கர்ப்ப காலத்தில் உடல் எடை வெகுவாக அதிகரித்தபோதும் மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் தனது அழகிய மெல்லிய உடல் அமைப்பை திரும்பவும் பெற்றார் ஏ தில் ஹை முஷ்கில் திரைப்பட நாயகி.

முடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்!

45 வயதான போதும் இன்றும் இளமைத் துள்ளலோடு பளபளப்பான உடல் தோற்றத்தோடு மினுமினுப்பாக இருக்கிறார். ஒவ்வொரு முறை அவர் வெளியில் வரும் போதும் அவரது கிரேஸ் கூடிகொண்டேபோகிறது.

Beautiful skin with the ingredients in the kitchen- Aishwarya Bachchan

ஐஸ்வர்யா பச்சனின் மினுமினுப்பான தோலின் ரகசியம் பற்றி கேட்டதற்கு அவர் கூறிய பதில், அனைவரது சமயலறையில் எளிதாக கிடைக்கக்கூடிய வழக்கமாக பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஒரு பியூட்டி பேக் மூலம் அழகான தெளிவான சருமத்தை பெறலாம், என்றார்.

நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கடலை மாவு, மஞ்சள் மற்றும் கிரீம் சேர்த்த கலவையை பயன்படுத்துவதாக ஐஸ்வர்யா பச்சன் தெரிவித்தார். இந்த பியூட்டி பேக் மூலம் பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை பெறலாம். இந்த பியூட்டி பேக் அனைத்து விதமான தோல் வகைகளுக்கும் ஏற்றது.

Beautiful skin with the ingredients in the kitchen- Aishwarya Bachchan

இது தோலில் உள்ள அழுக்கு மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். இவை அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை உபயோகித்து கொள்ளலாம். இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் என்பதால் உடல் தோலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது. இது தான் ஐஸ்வர்யா பச்சனின் தோல் பளபளப்பிற்கு ரகசியம்.

இது போன்ற தந்திரத்தை பயன்படுத்தி தான் தங்கள் சருமத்தை பட்டு போல் வைத்திருக்கிறார்கள் பிரியங்கா சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர் போன்ற பலர். கடலை மாவு முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றுகின்றன. மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள கருவளையங்கள், சூர்யா கதிர்களால் ஏற்படும் ஸ்கின்டேன் மற்றும் வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாத்து சருமத்தை மென்மையாக்கி தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

உலக அழகிகளே இது போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி பளபளப்பாக இருக்கிறார்கள். இது போன்ற பியூட்டி பேக்கை நாம் ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது.

English summary
Asked about the secret of Aishwarya Bachchan's glittery skin, she replied, "You can get pretty clear skin with a beauty pack with the usual ingredients that are easily available in everyone's kitchen."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more