லக்ஸ் சோப்பின் புதிய ஜோடி தனுஷ், சோனம் கபூர்
மும்பை: லக்ஸ் சோப்பின் புதிய ஜோடியாக ராஞ்ஹனா ஜோடி தனுஷ், சோனம் கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடி இனி லக்ஸ் சோப் விளம்பரங்களில் வரும்.
அழகுசாதன சோப்பான லக்ஸ் பெரும்பாலும் நடிகைகளையே தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்கும். சில சமயம் நடிகர்களை தேர்வு செய்யும். ஹேமமாலினி, மதுபாலா, கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நடிகைகள் லக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
லக்ஸ் பிராண்ட் அம்பாசிடராவதை சில நடிகைகள் பெருமையாக கருதுகின்றனர். இந்நிலையில் லக்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடர்களாக ராஞ்ஹனா ஜோடி தனுஷ், சோனம் கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய லக்ஸ் ஜோடி
சோனம், தனுஷுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன ஜெனரல் மேனேஜர் சுதிர் சீதாபதி தெரிவித்துள்ளார். ராஞ்ஹனா புரோமோவை பார்த்து அசந்த அவர் அந்த ஜோடியை லக்ஸ் விளம்பரத்திற்கும் எடுத்துள்ளார்.

கத்ரீனா-ஷாருக்
ஜப் தக் ஹை ஜான் படத்திற்கு பிறகு கத்ரீனா கைப், ஷாருக்கான் ஜோடி லக்ஸ் விளம்பரத்தில் வந்தது.

ஐஸ்-அபிஷேக்
அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் ஜோடியாக சேர்ந்து லக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள்- ஜோடி
திரை நடிகைகளின் அழுகுசாதன சோப்பான லக்ஸ் தற்போது ஜோடிகளுக்கான சோப்பாக மெல்ல மெல்ல மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











