வீட்ல ஜாலியாக பொழுதை கழிக்கறதுதான் எப்பவுமே என்னோட கொண்டாட்டம்... பூஜா ஹெக்டே ட்வீட்
மும்பை : நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்காக நாளைய தினம் சென்னை வரவுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய பார்ட்டி கொண்டாட்டம் குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நாளை சென்னை வருகை
நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என தொடர்ச்சியான படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக நாளைய தினம் சென்னை வரவுள்ளார்.

2வது கட்ட படப்பிடிப்பு
பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நாளை மறுதினம் சென்னையில் துவங்கவுள்ளது. பூஜா ஹெக்டே மற்றும் விஜய் இருவரும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி நாளை பூஜா ஹெக்டே சென்னை வரவுள்ளார். முதல்கட்டமாக இருவரும் பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பிரபாசுடன் ஜோடி
இதேபோல பிரபாசுடன் தெலுங்கில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிலும் பூஜா ஹெக்டே பங்கேற்று வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் தான் மேக்கப் செய்யும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வித்தியாசமான பூஜா ஹெக்டே
இந்நிலையில் வீட்டில் வசதியாக அமர்ந்துக் கொண்டு பொழுதை கழிப்பது தான் தன்னுடைய பார்ட்டி கொண்டாட்டம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உடன் தான் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











