நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!

By Sudha

புதுமுக நடிகர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ராதாரவி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் முக்கியமானது - புதுமுக நடிகர், நடிகைகள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமலேயே திரைப்படங்களி்ல் நடித்து வருகின்றனர். இந்தப் போக்கு நீண்ட காலமாகவே தொடர்கிறது. இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.

இந்தக் கால கட்டத்திற்குள் புதுமுக நடிகர் நடிகைகள், சங்க உறுப்பினராகி விட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்ப் படங்களில் நடிக்க அவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்பட மாட்டாது என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல, பெப்சி அமைப்புடன் நிலவி வரும் பூசல் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் போடப்பட்டது.

நடிகர் சங்கத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில்தான் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஆனால் அங்கு கட்டுமானப் பணிகள் நடப்பதால் இன்றைய கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்தது.

முன்னணி நடிகர், நடிகையர் வரவில்லை

நடிகர் சங்க கூட்டங்களுக்குப் பொதுவாக நடிகர் நடிகைகள் அதிக அளவில் வருவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை. வலியக்கக் கூப்பிட்டாலும் கூட வர மாட்டார்கள். சாதாரண கூட்டமாக இருந்தாலும் சரி, மிக முக்கியமான கூட்டமாக இருந்தாலும் சரி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ, விஜயகாந்த்தோ, மற்றவர்களோ வரவே மாட்டார்கள். அந்த அளவுக்கு சங்கம் மீது அவர்களுக்கு 'ஒட்டுதல்' அதிகம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, திமுக ஆட்சியின்போது பத்திரிக்கையாளர்களை சரமாரியாக திட்டுவதற்காகவே கூட்டப்பட்ட கூட்டத்தில் மட்டும் ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர். விவேக்கும், சத்யராஜும் மகா அசிங்கமாக அப்போது பேசியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கூட்டத்திலும் கூட கமல்ஹாசன் போன்ற சிலர் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் நிலைமை மகா மோசமாக இருந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களான விஜய்யைக் காணோம், அஜீத்தைக் காணோம், சூர்யாவைக் காணோம், 'ஜட்டி' புகழ் விவேக்கைக் காணோம், சத்யராஜைக் காணோம். வேறு எந்த முன்னணி நடிகரையும் காணோம். அதேபோல முன்னணி நடிகைகள் யாரும் வரவில்லை. 'ரிடையர்ட்' நாயகிகளான குயிலி,சத்யப் பிரியா போன்ற சிலரைத்தான் காண முடிந்தது. பெரும்பாலும் கூட்டத்தில் நாடக, துணை நடிகர்களே அதிகம் காணப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X