சொந்தப்படம் எடுக்க 'தில்லு' வேணும்.... பிரபுதேவா

By Mayura Akilan

சொந்தமாக படம் எடுக்க தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம் தன்னிடத்தில் இல்லை என்று டான்ஸ்மாஸ்டரும் பிரபல இயக்குநருமான பிரபுதேவா கூறியுள்ளார்.

பிரபுதேவாவிற்கு மெழுகுச் சிலை வைத்து கொண்டாடுகின்றனர் மும்பை ரசிகர்கள். இதுபற்றி பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள பிரபுதேவா, 7 மாதங்களுக்கு முன்பே இது தொடர்பான வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும், பெற்றோரிடம் கூட சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

மெழுகுச் சிலை பற்றியும், தன்னுடைய அடுத்த புராஜெக்ட் பற்றியும் பிரபுதேவா சொன்னதை மேற்கொண்டு படியுங்களேன்.

கண், காது அளந்தாங்க

கண், காது அளந்தாங்க

மெழுகு சிலைக்காக கண், காது அளந்தாங்க சிலை ரெடியான உடன் நேரடியாக பார்த்து அசந்து போய்விட்டேன். என் பசங்கதான் பார்க்க முடியாம போச்சு. ஸ்கூலுக்கு போக சென்னைக்கு கிளம்பி போயிட்டாங்க

காதல் பற்றிய எண்ணமில்லை

காதல் பற்றிய எண்ணமில்லை

எனக்கு நிறைய வேலை இருக்கு... ஓய்வே இல்லை... ஓடிக்கிட்டே இருக்கேன். காதல் பற்றி நினைக்க நேரமே இல்லை. சொல்லப்போன அதைப்பற்றிய சிந்தனை இல்லவே இல்லை.

தமிழ் படம் இயக்க ஆசை

தமிழ் படம் இயக்க ஆசை

இந்தியில 2 படம் அடுத்தடுத்து ரெடியா இருக்கு. தமிழ் படம் பண்ண்ணும்னு ஆசை இருக்கு, இதுவரை யாரும் கேட்கலை.

தைரியம் இல்லை

தைரியம் இல்லை

சொந்தப்படம் எடுக்கிற தைரியம் எனக்கு இல்லை. அதுக்கு தனி தைரியம் வேணும். நான் கிரியேட்டர், எனக்கு அதுமட்டும்தான் தெரியும். தயாரிப்பாளர் ஆவதற்கு தனி திறமை வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X