அப்போ எப்படி போஸ் கொடுத்து இருக்கேன் பாருங்க.. ரசிகர்களை திணறவிடும் பிரபல நடிகை! லைக்ஸ் அள்ளுது!

இங்கிலாந்து: ஷேம்லஸ், வொண்டர் வுமன் படங்களில் நடித்துள்ள நடிகை எலிசபெத் ஹர்லே தனது த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

'மம்மி' பட நடிகர் பிரண்டன் ஃபேஸரின் Bedazzled படத்தில் டெவிலாக நடித்து பிரபலமானவர்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்த எலிசபெத் ஹர்லேயின் இந்த ஹாட் புகைப்படம் தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உலகளவில் பிரபலம்

உலகளவில் பிரபலம்

Aria எனும் ஹாலிவுட் படத்தின் மூலம் 1978ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை எலிசபெத் ஹர்லே. 2000ல் வெளியான ஃபேண்டஸி படமான Bedazzled படம் இவருக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் ஹாட்டான டெவிலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருப்பார்.

எத்தனை கணவர்

எத்தனை கணவர்

2007ம் ஆண்டு இந்திய தொழிலதிபர் அருண் நாயரை திருமணம் செய்து கொண்ட இவர், 2011ம் ஆண்டு குடும்ப சண்டை காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டீவ் பிங்குடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் வாலிப வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.

முன்னாள் கணவர் தற்கொலை

முன்னாள் கணவர் தற்கொலை

55 வயதாகும் நடிகை எலிசபெத் ஹர்லேயின் முன்னாள் கணவர் ஸ்டீவ் பிங் கடந்த ஜூன் 22ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த சோகம் கொஞ்சம் கூட இல்லாமல், டாப்லெஸ் போஸ் கொடுத்து நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகினார்.

தாராளமான போஸ்

தாராளமான போஸ்

இந்நிலையில், 90களில் இளமையுடன் இருக்கும் காலத்தில் ரொம்ப தாராளமாக முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த செம கிளாமரான புகைப்படத்தை தற்போது பதிவிட்டு, அப்போ எப்படி போஸ் கொடுத்து இருக்கேன் பாருங்க என பதிவிட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார் எலிசபெத்.

இப்பவும் நீங்க அழகு தான்

இப்பவும் நீங்க அழகு தான்

90களில் நாயகியாக வலம் வரும் போது மட்டுமல்ல இப்பவும் நீங்க பிகினி அணிந்தும், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தும் உங்களுடைய அழகில் மிரட்டித் தானே வறீங்க என ரசிகர்கள் அவரது போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், டைம்லஸ் பியூட்டி என்றும் எபிக் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

வெப்சீரிஸ்

வெப்சீரிஸ்

இயக்குநர் மார்க் ஸ்க்வான் இயக்கத்தில் வெளியான தி ராயல்ஸ் எனும் வெப் தொடரில் 2015 முதல் 2018 வரை லீடு ரோலில் நடித்து அசத்தி உள்ளார் எலிசபெத் ஹர்லே. அமேசான் பிரைமில் இந்த வெப்சீரிஸ் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்த மர்ம தொடராக ராயல்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X