பட பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் சிம்பு ஹீரோயின்
ஹைதராபாத்:ஐஸ்மார்ட் ஷங்கர் பட பேனருக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்துள்ளனர்.
பூரி ஜெகன்நாத் தயாரித்து இயக்கிய ஐஸ்மார்ட் ஷங்கர் படம் நேற்று வெளியானது. ராம் போதினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து நடிகை சார்மி தயாரித்துள்ளார்.

படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த ராம் போதினேனிக்கு இந்த ஐஸ்மார்ட் ஷங்கர் படம் மிகவும் முக்கியமானது ஆகும். படத்தை பார்த்த விமர்சகர்கள் துப்பாத குறையாக திட்டுகிறார்கள். இயக்குநர் மூளையை கழற்றி வைத்துவிட்டு படத்தை எடுத்துள்ளார் என்கிறார்கள்.
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை பார்க்க வேண்டாம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரசிகர்களோ எந்த விமர்சனத்தையும் காதில் வாங்குவதாக இல்லை. அவர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
விமர்சகர்களால் வருத்தம் அடைந்த படக்குழு ரசிகர்களால் உற்சாகம் அடைந்துள்ளது. அடுத்தடுத்து ஃபிளாப் படங்களை கொடுத்த ராம் போதினேனி ஐஸ்மார்ட் ஷங்கர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் நிம்மதி அடைந்துள்ளார்.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜகதாம்பா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள ஐஸ்மார்ட் ஷங்கர் பேனருக்கு பால் அல்ல மாறாக பீர் அபிஷேகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.
அந்த வீடியோவை பூரி ஜெகன்நாத் மற்றம் சார்மி ஆகியோர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.
ஐஸ்மார்ட் ஷங்கர் பட வசூல் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் அமோக ஆதரவை பார்த்து பூரித்துப் போயுள்ளதாக தெரிவித்துள்ளார் சார்மி. ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராம் போதினேனிக்கு இந்த படம் கை கொடுத்துள்ளது.
மோசமான விமர்சனம் எழுந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்ல மாட்டார்கள் என்பதை ராம் போதினேனி ரசிகர்கள் பொய்யாக்கியுள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. போட்ட பணத்தில் பாதி முதல் நாளே கிடைத்துவிட்டது என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ. 8.54 கோடி வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











