Kick: ஒரு நியாயம் வேணாமா? சந்தானம் பேனருக்கு பீர் அபிஷேகம்!

புதுச்சேரி: கிக் படம் நேற்று வெளியான நிலையில், புதுச்சேரியில் சந்தானம் ரசிகர்கள் அவரது பேனருக்கு பீரால் அபிஷேகம் செய்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தனக்கென தனி, டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Beer abhishekam for Santhanam banner in Puducherry

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் வகையில் இல்லை

டிடி ரிட்டன்ஸ்: இதையடுத்து, கடந்த மாதம் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக அமைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்தானத்தின் முந்தைய ஹாரர் காமெடி படமான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களின் வரிசையில் வெளிவந்த இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது.

Beer abhishekam for Santhanam banner in Puducherry

கிக்: இந்த படத்தைத் தொடர்ந்து கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்த கிக் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தில், தன்யா ஹோப், தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, சுதாகர். எஸ் ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பீர் அபிஷேகம்: இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ராஜா திரையரங்கில் கிக் படம் வெளியானதை ஒட்டி சந்தானம் படத்தின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து பூ தூவி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு சந்தானம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் இலவசமாக ஒரு ஷோ ஒரு காட்சி காட்டப்பட்டது இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டங்களுடன் சென்று கிக் படத்தை பார்த்தனர்.

Beer abhishekam for Santhanam banner in Puducherry

ஒரு நியாயம் வேணாமா: புதுவையில் சந்தானத்தின் பேனருக்கு பீரால் அபிஷேகம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, என்னத்தான் புதுச்சேரி என்றாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்? என இணைவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X