அனுஷ்காவிற்கு சிறப்பான திருப்பம் தந்த அருந்ததி படம்..படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
ஐதராபாத் : நடிகை அனுஷ்கா தென்னிந்திய அளவில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்தவர். தற்போதும் இவரது ஃபேன் பேஸ் அதிகமாகத்தான் காணப்படுகிறது.
இவரது நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியாகி மிக சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் அருந்ததி.
ஹாரர் த்ரில்லராக வெளியான இந்தப் படத்தில் அனுஷ்காவின் கேரக்டர் மிகுந்த மிரட்டலாக அமைந்தது.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தென்னிந்திய அளவில் மிகப்பிரபலமான நடிகையாக நாகார்ஜுனா, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் ஆர்யாவுடன் நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடலை அதிகமாக ஏற்றி மிகவும் குண்டான தோற்றத்துடன் நடித்திருந்தார்.

குண்டான அனுஷ்கா
யோகா டீச்சராக இருந்தவர் என்பதால் ஓவர் கான்பிடன்ஸ் காரணமாக அவர் குண்டாகி நடித்தார். ஆனால் அவரால் பழையபடி தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் அதிகமான பட வாய்ப்புகளையும் அவர் இழந்தார். தொடர்ந்து மாதவனுடன் இதே தோற்றத்தில் நடித்த சைலன்ஸ் படம் சைலண்டாக சொதப்பியது.

அனுஷ்காவின் 48வது படம்
இந்நிலையில் தற்போது அனுஷ்காவின் 48வது படத்தின் போஸ்டர்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற பெயரில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

மம்தா நிராகரித்த வாய்ப்பு
அனுஷ்கா ஷெட்டியின் அதிரடி நடிப்பில் வெளியான அருந்ததி படம் அவருக்கு விமர்சன ரீதியாக கைக்கொடுத்த நிலையில், இந்தப் படத்தில் முதலில் நடிக்க மம்தா மோகன்தாஸ்தான் கமிட்டாகியிருந்தார். ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க தயங்கி வெளியேறிய நிலையில், அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டார் அனுஷ்கா.

முன்னணி நடிகையான அனுஷ்கா
இந்தப் படம் அதிரடி வெற்றியடைந்த நிலையில், தொடர்ந்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறினார் அனுஷ்கா. கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸ் விலகியது மிகப்பெரிய தவறு என்று ராஜமௌலி அவரிடம் கூறியிருந்தார்.

மம்தா நிராகரிக்க காரணம்
இவ்வளவு பிரம்மாண்டமான அருந்ததி படத்தை அந்த தயாரிப்பாளரால் எடுத்து முடிக்க முடியாது என்று தன்னுடைய மேனேஜர் கூறியதைக்கேட்டு தான், படத்திலிருந்து விலகும் முடிவை தான் எடுத்ததாக மம்தா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மம்தாவின் விலகல் முடிவால்தான் ரசிகர்களுக்கு அனுஷ்கா என்ற சிறப்பான நடிகை கிடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











