அப்போ அசல், இப்போ வலிமை... அஜித் கொஞ்சம் இதை கவனித்திருக்கலாம்!
சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.
ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்
ஸ்டாண்ட் காட்சிகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்த படக்குழு அசல் படத்தை போலவே முக்கியமான ஒன்றை கோட்டைவிட்டது தான் இப்படத்தின் சறுக்கலுக்கு மிகப்பெரிய காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

பிரம்மாண்ட பட்ஜெட்டில்
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றாவது வெளியாகி விடும் ஆனால் நடிகர் அஜித்திற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்தது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த பிரம்மாண்ட பட்ஜெட்டில் வலிமை திரைப்படம் உருவாகி வந்தது.

வலிமை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் பொங்கல் தினத்திற்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் கொடுப்பதில் சிக்கல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு மாற்றி வைத்து அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வலிமை வெளியாகி ரசிகர்களை ஆரவார படுத்தியது.

மிகப் பெரிய ஏமாற்றமாக
பொதுவாக ஹெச் வினோத்தின் திரைப்படங்கள் என்றாலே விருவிருப்புக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. அதே பார்முலாவில் வலிமையும் உருவாகி இருந்தாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் கனெக்ட் ஆகவில்லை என பலரும் இப்படத்தை விமர்சித்து வந்தனர். குறிப்பாக சினிமா விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். ஏனென்றால் இயக்குனர் ஹெச் வினோத் மீதான நம்பிக்கையே இந்த படத்தை வெற்றி பெறச் செய்யும் என பலரும் எதிர்பார்த்திருக்கையில் வலிமை மிகப் பெரிய ஏமாற்றமாக அடைந்தது ரசிகர்களை மிகவும் அப்செட் செய்தது.

அசல் போலவே வலிமையும்
ஸ்டண்ட் காட்சிகளுக்கும், பைக் ரேஸிங் காட்சிகளுக்கு மட்டும் பெரிதாக முனைப்பு காட்டிய படக்குழு சென்டிமென்ட் காட்சிகளில் கோட்டை விட்டு விட்டது. இதே போலத்தான் அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியான அசல் திரைப்படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அப்பா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் கோட்டைவிட்டு அசல் படம் தோல்வியை சந்தித்தது இப்பொழுது அதே நிலைமை தான் வலிமை படமும் சந்தித்துள்ளது அந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











