இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் கிடா.. ஜெய்பீம் படத்துடன் இணைந்தது!
சென்னை : சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாக கடந்த 80 ஆண்டுகளாக கோவா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் சூர்யாவின் ஜெய்பீம் படம் இணைந்துள்ளது.
இதனிடையே ஜெய்பீம் படத்துடன் இணைந்துள்ளது தமிழின் கிடா. இந்தப் படமும் இதே பிரிவில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

கோவா சர்வதேச திரைப்பட விழா
சர்வதேச அளவில் சிறந்த மற்றும் புகழ்பெற்ற திரைப்பட விழாவாக கடந்த 80 ஆண்டுகளாக கோவா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டும் சர்வதேச அளவில் பல திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் சிறப்பான படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சூர்யாவின் ஜெய் பீம் படம்
இதனிடையே இந்தியன் பனோரமா பிரிவில் இந்த ஆண்டு ஜெய் பீம் படம் தேர்வாகி அசத்தியுள்ளது. சூர்யா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக பல விருதுகளை கைப்பற்றி ஐஎம்டிபியிலும் சிறப்பான புள்ளிகளை இந்தப் படம் பெற்றிருந்தது.

அறிமுக இயக்குநரின் கிடா படம்
இந்தப் படத்தி பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் உன்னத படைப்புகளில் ஒன்றாக கிடா படமும் தற்போது இணைந்துள்ளது. மதுரை அருகே கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தாவிற்கும் இடையில் காணப்படும் உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

ரிலீசுக்கு தயாராகும் கிடா படம்
இந்தப் படத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் உன்னத படைப்புகளில் ஒன்றாக கிடா படமும் தற்போது இணைந்துள்ளது. மதுரை அருகே கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தாவிற்கும் இடையில் காணப்படும் உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுமுகங்களின் முயற்சி
இந்தப் படத்தை கிருமி, ரெக்க போன்ற படங்களில் உதவி இயக்குநராக செயல்பட்ட ரா வெங்கட் இயக்கியுள்ளார். தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடித்துள்ள மாறுபட்ட காவியமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இந்தப்படம் தற்போது சிறப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











