வாலிக்கு முன்னாடியே.. அஜித் படத்தில் எஸ்.ஜே. சூர்யா.. என்ன ரோல் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

சென்னை: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. ஆனால், அந்த படத்திற்கு முன்பே, தல அஜித்தின் ஒரு படத்தில் நடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

லயோலா கல்லூரியில் படித்து வந்த எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் பாக்கியராஜிடம் இன்டர்ன்ஷிப் பயின்றார்.

பின்னர், வசந்த் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.

ஆசை படத்தில்

ஆசை படத்தில்

வசந்த் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான ஆசை படத்தில் அஜித், சுவலக்‌ஷ்மி, பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் உதவி இயக்குநராக எஸ்.ஜே. சூர்யா பணி புரிந்தார். வழக்கமாக இயக்குநர்கள் தங்கள் உதவி இயக்குநர்களை ஆம்பியன்ஸாகவும், ஒரு சில காட்சிகளில் நடிக்க வைப்பது வழக்கம்.

ஆட்டோ டிரைவர்

தல அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்குவதற்கு முன்னதாக ஆசை படத்தில் ஆட்டோ டிரைவர் ரோலில் எஸ்.ஜே. சூர்யா ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, ரசிகர் ஒருவர் வைரலாக்க, அதைப் பார்த்த எஸ்.ஜே. சூர்யா, வணக்கம் வைக்கும் எமோஜியை போட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அஜித்துடன்

அஜித்துடன்

ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜே. சூர்யா, அஜித்துக்கு சொன்ன கதை பிடித்துப் போக, வாலி படம் உருவானது. டபுள் ரோலில் அஜித், சிம்ரன் ஜோடி என அஜித்துக்கும், எஸ்.ஜே. சூர்யாவுக்கும் செம படமாக வாலி படம் அமைந்திருந்தது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு இன்னமும் அஜித்துடன் எஸ்.ஜே. சூர்யா இணைந்து பணியாற்றவில்லை.

முருகதாஸை போலவே

முருகதாஸை போலவே

தீனா படத்தை இயக்கி, அஜித்துக்கு தல என்ற அடைமொழியை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் போல, அஜித்துடன் அடுத்த படத்தை பண்ண முடியாத நிலை எஸ்.ஜே. சூர்யாவுக்கும் உருவாகி உள்ளது. அஜித்துடன் பணிபுரிய பல முறை முருகதாஸ் தனது ஆர்வத்தை தெரிவித்தும் அஜித் சம்மதிக்காததற்கு வேறு காரணம் இருக்கும் என்று கோலிவுட் நம்புகிறது.

வில்லன் ரோலில்

வில்லன் ரோலில்

வாலி படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் குஷி படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கி இருந்தார். ஆனால், அதற்கு அடுத்து நியூ படத்தின் மூலம் நடிக்க வந்து விட்டார். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். அதேபோன்று தல அஜித்துடன் வில்லன் ரோலிலாவது மீண்டும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X