விக்ரம் படத்திற்கு முன்பே விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்.. சிறப்பான வீடியோ வெளியீடு!

சென்னை : விக்ரம் படத்தின் இடைவேளை காட்சி சிறப்பாக அமைந்ததற்கு அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட புதிய கேமரா காரணமாக அமைந்துள்ளது.

Recommended Video

Mocobot-டை முதலில் பயன்படுத்தியது யார்? | Vikram | Interval Making Scene

Mocobot கேமராவை விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளை படமாக்க படக்குழு பயன்படுத்தியுள்ளது.

ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் படத்தில் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கூறுகின்றன.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஜூன் மாதத்தில் வெளியான படம் விக்ரம். இந்தப் படம் கமலுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளது. சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த இடைவேளை

ரசிகர்களை கவர்ந்த இடைவேளை

இந்தப் படத்தின் அனைத்து காட்சி அமைப்புகளுமே சிறப்பான கவனத்துடன் படமாக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிரட்டலான திரைக்கதையுடன் கூடிய காட்சிகளை இந்தப் படம் கொடுத்தது. குறிப்பாக இடைவேளையின் போது அமைந்த காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

சிறப்பான Mocobot கேமரா

சிறப்பான Mocobot கேமரா

இதற்கு இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் படத்தில்தான் இந்த கேமரா முதல்முறையாக பயன்படுத்தப் பட்டிருப்பதாக ரசிகர்கள் நினைத்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு முன்னதாகவே விஜய் படத்தில் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

விஜய் பட க்ளைமாக்சில் Mocobot கேமரா

விஜய் பட க்ளைமாக்சில் Mocobot கேமரா

விஜய்யின் பீஸ்ட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் மற்றும் வில்லன் இருவரும் காணப்படுகின்றனர். அந்த Mocobot கேமரா சிறப்பாக செயல்படுவதும் அந்த வீடியோவில் காணப்படுகிறது.

நவரசா டீசரிலும் Mocobot கேமரா

நவரசா டீசரிலும் Mocobot கேமரா

இதேபோல முன்னதாக நவரசா டீசரிலும் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகள் சிறப்பாக அமைந்ததால் அது அதிகமான கவனத்தையும் இந்த கேமரா குறித்த தகவலையும் அதிகமாக வெளியாக காரணமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X