Rajini: வாக்களிக்கும் முன் ஒரு ரிலாக்ஸா வாக்.. நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே தங்களது வாக்குரிமையை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிகளுக்கு திரளாக வருகை தந்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் தனது வாக்கினை பதிவு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்களும், பொதுமக்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த் : இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை வாக்களிப்பதற்கு முன் வழக்கம்போல தனது டைப்பயிற்சியை மேற்கொண்டார். இன்று தேர்தல் நாள் என்பதால், அவர் வசிக்கும் பகுதியில் கூடியிருந்த ரசிகர்களுக்கு கைகளை அசைத்து தனது அன்பையும் வெளிப்படுத்தினார். அவரது எளிமையான நடத்தை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். தேர்தல் நாளை முன்னிட்டு, பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருவது பொதுமக்களிடையே வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் ஊக்கமளித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருந்து பிரபலங்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications