இன்று வாரிசு அப்டேட் வருமா?...காத்திருக்கும் ரசிகர்கள்...அப்படி என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இது ஒருபக்கம் விமர்சனங்களை சந்தித்தாலும், மறுபக்கம் விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் விமானத்தில் வந்த நடிகை

விஜய்யுடன் விமானத்தில் வந்த நடிகை


சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கிய வாரிசு படத்தின் லேட்டஸ்ட் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. 3 வார இடைவெளிக்கு பிறகு விஜய் மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். விஜய் சென்னை திரும்பியதை நடிகை சுனைனா உறுதி செய்துள்ளார். லத்தி படத்தின் டீசர் விழாவிற்காக சென்னை வந்த தன்னுடன் தான் விஜய் விமானத்தில் பயணம் செய்ததாக மேடையிலேயே சொல்லி விட்டார்.

இன்று வாரிசு அப்டேட் வருமா

இன்று வாரிசு அப்டேட் வருமா

அடுத்த கட்ட ஷுட்டிங் எங்கு, எப்போது துவங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் செம ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பலரிடமும் இன்று வாரிசு அப்டேட் வருமா என்றும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இன்றைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்

இன்றைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்

இதனால் இணையதளவாசிகள் இன்று அப்படி என்ன ஸ்பெஷல்...இன்று எதற்காக விஜய்யின் வாரிசு பட அப்பேட் வரணும் என சந்தேகமாக கேட்டு வருகின்றனர். ஆனால் வாரிசு பட டைரக்டர் வம்சி பைடபள்ளியின் பிறந்த நாள் இன்று. அதனால் தான் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். தெலுங்கில் முன்னணி டைரக்டராக இருக்கும் வம்சி பைடபள்ளி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 அட...இது தான் விஷயமா?

அட...இது தான் விஷயமா?

2007 ம் ஆண்டு தெலுங்கில் முன்னா என்ற படத்தை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு பிருந்தாவனம், எவடு, ஓபிரி, மகரிஷி ஆகிய ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார். ஏற்கனவே தெலுங்கில் ஓபிரி என்ற பெயரிலும், தமிழில் தோழா என்ற பெயரிலும் கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கும் இவர் அறிமுகமானவராகி விட்டார். தற்போது வாரிசு படத்தையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளராகும் வம்சி பைடபள்ளி

தயாரிப்பாளராகும் வம்சி பைடபள்ளி

டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர் என பிரபலமான வம்சி, 2004 ம் ஆண்டு ரிலீசான வர்ஷம் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். ஓபிரி படத்திற்காக சிறந்த டைரக்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை வென்ற வம்சி, 2019 ல் வெளியான மகரிஷி படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார். விஜய் தேவரகொண்ட நடிக்கும் ஜெஜிஎம் : ஜன கன மன படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X