சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதில் நிறைய பிரச்சினை இருக்கு: ஐஸ்வர்யா ஏன் இப்படி சொன்னாங்க?
டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா, சில மாதங்களுக்கு முன்னர் தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார்.
தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களது பிரிவை சமூக வலைத்தளங்களில் ஒன்றாக அறிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, ரஜினியின் மகளாக இருப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் மகள்
தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே தனி அடையாளமாக இருப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இருவரது திருமணத்திற்கு முன்பு வரை, ரசிகர்களால் இவர்கள் பெரிதும் அடையாளம் காணப்படவில்லை.

சிம்புவுடன் காதல்? தனுஷுடன் திருமணம்!
தமிழ் சினிமாவில் சிம்பு சிக்ஸர்களாக விளாசிக் கொண்டிருந்தபோது, அவருடன் ஐஸ்வர்யாவுக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷ் திரையுலகில் அறிமுகமான ஓரிரு வருடங்களிலேயே அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இயக்குநராக அசத்திய ஐஸ்வர்யா
தனுஷை திருமணம் செய்துகொண்ட பிறகே ரசிகர்களிடமும் ஊடங்களிடமும் ஐஸ்வர்யா குறித்து பேச்சுகளும் செய்திகளும் அதிகம் வரத் தொடங்கின. அதேநேரம் தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் '3' படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இந்தப் படத்தில் தான் அனிருத்தும் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தார்.

திடீரென பிரிந்த தனுஷ் - ஐஸ்வர்யா
சினிமா பயணம், திருமண வாழ்க்கை, இரண்டு பையன்கள் என எந்த பிரச்சினைகளும் இல்லாமல் சென்று கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வயா இல்லறம், மெதுவாக திசை திரும்பியது. பல நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாக, கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருந்தன. இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்தே திடீரென தங்களது பிரிவை அறிவித்தனர்.

ஆளுக்கொரு தனி ரூட்டு
பிரிவைத் தொடர்ந்து இருவரும் ஆளுக்கொரு தனி ரூட்டில் பயணித்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனுஷ், இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற பெயரில் மீண்டும் சினிமா, மியூசிக் ஆல்பம் என பிஸியாகிவிட்டார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்துகொண்டார்.

நிறைய பிரச்சினைகள் இருக்கு
அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பது குறித்து மனம் திறந்தார். அதில், "நான் ரஜினியின் மகளாக இருப்பதால், ரொம்பவே கண்காணிக்கப்படுவதாகவும், இதனை சமாளிக்க முடியவில்லை" என்றும் கூறினார். மேலும், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதால், பல இடங்களில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், எப்போதுமே எங்கள் ஒழுக்கம் குறித்து பலரும் பேசி வருவதால் அது கஷ்டமாக இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











