»   »  சேதி கேட்டீங்களா? சல்மான் கானுக்கும், லூலியாவுக்கும் கல்யாணமாகிடுச்சாம்!

சேதி கேட்டீங்களா? சல்மான் கானுக்கும், லூலியாவுக்கும் கல்யாணமாகிடுச்சாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னாது சல்மான் கானுக்கு கல்யாணமாகிடுச்சான்னு ரொம்ப ஷாக் எல்லாம் ஆக வேண்டாம். அவருக்கு திருமணமாகிவிட்டதாக ரோமானியாவை சேர்ந்த ஊடகம் ஒன்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று மட்டும் தயவு செய்து கேட்காதீர்கள். இப்படி சொன்னது நாங்க இல்லை சல்மானை பெத்த தந்தை சலீம் கான் தான். அவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை சல்மானுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என கடவுளுக்கே தெரியாது என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

இந்நிலையில் தான் சல்மானின் காதலி என்று சொல்லப்படும் நடிகை லூலியா வந்தூரின் நாட்டில் ஒரு பிரேக்கிங் நியூஸ்.

டோஆம்னா கான்

டோஆம்னா கான்

லூலியா ரோமானியாவை சேர்ந்தவர். அவரது நாட்டில் லூலியாவுக்கும், சல்மானுக்கு திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி தலைப்பில் டோஆம்னா கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படின்னா?

அப்படின்னா?

அது என்ன டோஆம்னா கான் என்று ரொம்ப யோசிக்க வேண்டாம். டோஆம்னா கான் என்றால் ராயல் மிஸஸ் கான் என்று அர்த்தமாம். சல்மான் கான் திருமணத்தை பற்றி பேச்சே எடுக்காத போதிலும் இப்படி செய்தி வெளியிட்டுள்ளது ரோமானிய ஊடகம்.

திருமணம்

திருமணம்

சல்மான் கான் இந்த ஆண்டு இறுதியில் லூலியாவை திருமணம் செய்து கொள்வார் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள். அவர்கள் தான் பேசுகிறார்களே தவிர சல்லு பாய் ம்ஹூம் கண்டுக்கவே இல்லை.

காதலிகள்

காதலிகள்

முன்னதாக நடிகைகள் சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் ஆகியோர் சல்மான் கானின் காதலிகளாக இருந்தனர். டெய்சி ஷா, லாரா தத்தா, ஜரீன் கான் பெயர்களும் சல்மான் கான் பெயருடன் சேர்ந்து அடிபட்டது.

English summary
According to a Romanian tabloid, Lulia Vantur is already married to Bollywood Sultan Salman Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil