தன் நிர்வாண போட்டோக்களை தானே வெளியிட்டு ஹேக்கருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை பெல்லா தார்ன் தனது நிர்வாண புகைப்படங்களை திருடி தொல்லை கொடுத்து வந்த ஹேக்கருக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பெல்லா தார்ன்(21). ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். அவர் நடிப்பது தவிர்த்து நன்றாக பாடவும் செய்வார்.
பெல்லா தனது செல்போனில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் யாரோ அவரின் செல்போனை ஹேக் செய்து அவரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டி வந்தார்.
பெல்லா தார்ன்
ஹேக்கரின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளானார் பெல்லா. இதையடுத்து நீ என்னடா என் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டுவது என்று அவரே அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஹேக்கரை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

ஹேக்கர்
என் போன் ஹேக் செய்யப்பட்டது. கடந்த 24 மணிநேரம் என் நிர்வாண புகைப்படங்களை வைத்து நான் மிரட்டப்பட்டேன். எனக்கு ஸ்பெஷலான ஒருவர் மட்டுமே பார்க்க வேண்டும் என்று இருக்கும் விஷயத்தை யாரோ என்னிடம் இருந்து எடுத்துவிட்டதாக உணர்கிறேன். அந்த ஹேக்கர் பிற பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தான். அவன் என்னுடன் நிறுத்திக் கொள்வது போன்று இல்லை என்று பெல்லா தெரிவித்துள்ளார்.

மிரட்ட முடியாது
நானே என் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். இனியும் அந்த ஆள் என்னை மிரட்ட முடியாது. இனி நான் நிம்மதியாக தூங்குவேன். என் வாழ்க்கையை நீ கட்டுப்படுத்த முடியாது. அவன் என்ன எந்த புகைப்படங்களை காட்டி மிரட்டினானோ அந்த புகைப்படங்கள் இவை தான். கடந்த 24 மணிநேரமாக நான் அழுது கொண்டிருந்தேன். நான் எழுதிய புத்தகத்தை கொண்டாடாமல் அழுதேன். விரைவில் போலீஸ் உன் வீட்டிற்கு வரும் என்று பெல்லா தெரிவித்துள்ளார்.

ஆதரவு
பெல்லாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் நீங்கள் செய்தது தான் சரி. அந்த ஹேக்கருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். இனி அவனால் உங்களை மிரட்ட முடியாது என்று தெரிவித்துள்ளனர். திரையுலக பிரபலங்களின் செல்போன்களை ஹேக் செய்து அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











