'அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்..' நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குச் செல்லும் அந்த ஹீரோ!

By

ஐதராபாத்: காஜல் அகர்வால் திருமணத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக, பிரபல ஹீரோ தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை வரும் 30 ஆம் திருமணம் செய்துகொள்கிறார்.

35 வயதான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் பிசியான ஹீரோயினாக இருக்கிறார்.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் திருமணத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்த காஜல் அகர்வால். ரசிகர்களின் வாழ்த்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். அவர் அதில், '30 ஆம் தேதி குடும்பத்தினர் மத்தியில் கவுதம் கிச்லுவுடன் மும்பையில் எனக்குத் திருமணம் நடக்க இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெல்லிய ஒளி

மெல்லிய ஒளி

இந்த கொரோனா காலம் எங்கள் வாழ்க்கையில் மெல்லிய ஒளியைப் பாய்ச்சியது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் மகிழ்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இத்தனை ஆண்டுகளும் நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி என்று கூறியிருந்தார்.

சாய் ஶ்ரீனிவாஸ்

சாய் ஶ்ரீனிவாஸ்

இந்நிலையில், தெலுங்கு ஹீரோ பெல்லங்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு காஜல் நன்றி தெரிவித்தார். சாய் ஶ்ரீனிவாஸும் காஜல் அகர்வாலும் இரண்டு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். சீதா என்ற படத்தில் நடித்தபோது காதலில் விழுந்ததாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

வாழ்க்கைத் துணை

வாழ்க்கைத் துணை

சாய் ஶ்ரீனிவாஸ், பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன். இந்நிலையில் நடிகர் சாய் ஶ்ரீனிவாஸ், காஜல் திருமணத்துக்கு செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, காஜல் என் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். அவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. எனக்கு தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்தாலும், திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X